எந்த வயதிலும் கண்ணாடி அணிவதில் விருப்பமில்லை என்பவர்களுக்கு அதற்கான மாற்று வழிகள் இன்று நிறைய உள்ளன.
அவற்றில் குறிப்பிடத்தக்கது கண் அறுவை சிகிச்சை. இப்படிச் செய்து கொள்வது நல்லதா? நிரந்தர தீர்வு கிடைக்குமா? கண் மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?
“கண்ணாடியைத் தவிர்க்க விரும்புபவர்கள், மாற்று வழிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு முன், விழித்திரையும் விழி நரம்புகளும் நன்றாக உள்ளனவா, பார்வைத்திறன் எந்த அளவுக்கு உள்ளது என்பதையெல்லாம் பரிசோதனை செய்து பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
மேற்குறிப்பிட்ட பரிசோதனையில் எல்லாம் நார்மல் என்று தெரிந்தால், கண்களுக்குள் அறுவை சிகிச்சை மூலம் செயற்கை லென்ஸ் பொருத்தலாம். இந்தச் சிகிச்சைக்கு ‘க்ளியர் லென்ஸ் எக்ஸ்ட்ராகக்ஷன்’ (Clear Lens Extraction) என்று பெயர்.
க்ளியர் லென்ஸ் எக்ஸ்ட்ராக்ஷன் சிகிச்சை செய்யும்போது நம் கண்களுக்குள் வைக்கப்படுகிற இன்ட்ரா ஆகுலர் லென்ஸை (Intraocular lens) மோனோஃபோக்கலாக (Monofocal lens) பொருத்தினால், ஒருபக்க பார்வை தெளிவாக இருக்கும். படிக்கும்போதான பார்வை தெளிவாக இருக்காது.
அதையே மல்ட்டிஃபோக்கல் ( Multifocal lens) அல்லது ட்ரைஃபோக்கல் (Trifocal Lens) லென்ஸ் பொருத்தினால், தூரப்பார்வை, இடைப்பார்வை மற்றும் கிட்டப்பார்வை மூன்றையும் சரி செய்து கொடுக்கும்.
ஒருவேளை நீங்கள் இரவில் டிரைவிங் செய்யும் வழக்கம் உள்ளவர் என்றால் உங்களுக்கு கண் மருத்துவர் மல்ட்டி ஃபோக்கல் லென்ஸ் பொருத்திக்கொள்ள அறிவுறுத்த மாட்டார்.
இதற்கு செலவு எவ்வளவு ஆகும் என்பதை துல்லியமாகச் சொல்ல முடியாது. ஏனெனில், நம்முடைய பிரச்சினை என்ன, எப்படிப்பட்ட லென்ஸ் தேவைப்படுகிறது, அது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட லென்ஸா, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதா,
எந்த மாதிரியான அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது, அதாவது ரோபோட்டிக் அறுவை சிகிச்சையா, லேசர் சிகிச்சையா என்பதையெல்லாம் பொறுத்து சிகிச்சைக்கான செலவு வேறுபடும்.
எனவே, முதலில் கண் அறுவை சிகிச்சை மருத்துவரை நேரில் அணுகி, உங்கள் பிரச்சினை மற்றும் தேவைகளைச் சொல்லி ஆலோசனை பெறுங்கள்.
அவர் சரியான சிகிச்சை, அதற்கான செலவு உள்ளிட்ட தகவல்களைச் சரியாகச் சொல்வார். அதன் பிறகு அறுவை சிகிச்சை தேவையா என்பதை முடிவு செய்து கொள்வது நல்லது” என்று விளக்கமளிக்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: உடல் எடையை வேகமாகக் குறைக்க நினைப்பவரா நீங்கள்? எச்சரிக்கும் ஐசிஎம்ஆர்!
ஒரு டோக்கன் கொடுத்தது தப்பாப்பா? : அப்டேட் குமாரு
விக்ரமை மிரட்டும் மாளவிகா மோகனன்.. தங்கலான் டிரெய்லர் எப்படி?