treasury reopen

46 ஆண்டிற்கு பிறகு திறக்கப்படும் கருவூலம்

Uncategorized போட்டித்தேர்வுகள்

திறக்கப்படும் கருவூலம்treasury reopen

  • உயர் நீதிமன்ற நீதிபதி பிஸ்வநாத் ராத் கீழ் அமைக்கப்பட்ட குழு , பூரி, ஸ்ரீ ஜெகநாதர் கோவில் கருவூலத்தில் உள்ள தங்கம் மற்றும் பல மதிப்புமிக்க பொருட்களை பட்டியலிடவுள்ளது.treasury reopen
  • 46 ஆண்டிற்கு பிறகு, வரும் ஜூலை 14 அன்று கருவூலத்தை திறக்க பரிந்துரை செய்துள்ளது ஜெகநாதர் கோவில் நிர்வாகம் .
  • பதிவுகளின்படி, கோவில் கருவூலத்தில் 454 கிலோ தங்கம் உள்ளது 12,838 (128.38 கிலோ) மற்றும் 293 வெள்ளி எடை 22,153 பாரிஸ்(221.53 கிலோ)
  • கருவூலம் ,60 சதுர அடிஅளவில் ,கோயிலின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது, கருவூலத்தில் இரண்டு அறைகள் உள்ளன , அதில் உள் அறை மாநில அரசால் திறக்கப்படும் என்ற ஒருமித்த கருத்தை தெருவித்துள்ளனர்.
  • சாவிகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பூட்டுகள் திறக்கப்படும் என்று மற்றொரு தீர்மானமும் எடுக்கப்பட்டுள்ளது.
  • பல்வேறு நடவடிக்கைகள் திறப்புடன் இணைக்கப்பட்டுள்ளது”நகை பொருட்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பெரிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது, மேலும் கருவூலத்தை கணக்கெடுப்பதும் மற்றும் பழுது பார்ப்பதும் எங்களது இரு கடமைகளாகும் என்று “நீதிபதி பிஸ்வநாத் ராத் தெரிவித்தார் .
  • கருவூலம் மற்றும் அதன் மதிப்புமிக்க பொருட்கள் குறித்து கவலை எழுந்தபோதும்,நவீன் பட் நாயக் 24 வருட ஆட்சியில், இந்த கருவூலத்தை திறக்க முயற்சி செய்ததே இல்லை
  • இது குறித்து விளக்கம் கோரி, இந்த விவகாரம் ஒரிசா உயர்நீதிமன்றத்தை எட்டியது, 2023லில் மாநில அரசு 2024லில் ரத யாத்திரை நடக்கும் , (ரத யாத்திரை என்பது  ஒடிசா மாநிலத்தின் பூரி கடற்கரை நகரத்தில் ஜெகன்நாதர் கோயிலில் குடி கொண்டுள்ள ஜெகன்நாதர், பலபத்திரர், சுபத்திரை ஆகியோர் தனித்தனியாக மூன்று இரதங்களில் ஏறி, பூரி நகரத்தை யாத்திரையாக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பதைக் குறிக்கும். இத்தேர்த் திருவிழா ஒன்பது நாட்கள் தொடர்ந்து நடைபெறும்).
  • அப்போது கோவிலில் தினம் பூஜைகள் நடக்காது அந்த நேரம் கருவூலம் திறக்க ஏதுவாக இருக்கும் என்று தகவல் வெளியான நிலையில்,உச்ச நீதிமன்ற நீதிபதி , அர்ஜித் பசையட் கீழ் அமைக்கப்பட்ட குழு கருவூலத்தை திறக்கும் முடிவில் இரண்டாவது அமர்வில் கூட தீர்மானமாக இல்லை என்பதால் அந்த முயற்சி தோல்வியடைந்தது.

 

மாணவர்களுக்கான குறிப்பு:
1. UPSC Civil Service GS-3 தாள் மற்றும் கட்டுரை எழுதவதற்கு உதவும்.
2. UPSC Civil Service Prelims மற்றும் TNPSC Group2 மற்றும் Group1 Prelimsக்கு உதவும்.
3. சமூகம் சம்பந்தமான தாள்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

*இந்த செய்தித் தொகுப்பு UPSC, TNPSC Group 1, 2 போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக.

-வர்ஷா செல்வச்சந்திரன்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

திரிபுராவில் தீ போல் பரவும் எச்.ஐ.வி

காங்கிரஸ் கோரிக்கையை ஏற்குமா மத்திய அரசு?

போருக்கான தீர்வு, போர்க்களத்தில் இல்லை

 

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *