ஒரு டோக்கன் கொடுத்தது தப்பாப்பா? : அப்டேட் குமாரு

டிரெண்டிங்

இன்னைக்கு விக்கிரவாண்டில இருந்து நண்பன் சாய்ந்தரமா போன் பண்ணான். சரினு அட்டெண்ட் பண்ணா…

“மச்சான் இன்னைக்கு எங்க தொகுதில பைஎலெக்சன்.. வேலையெல்லாம் முடிஞ்சு 6 மணிக்கு தான் ஓட்டு போட வந்தேன். இப்போ என்கிட்ட டோக்கன் கொடுத்திருக்காங்க..”

”சரி அதுக்கு என்ன”னு கேட்டா..

”இல்ல மச்சான்… இந்த டோக்கன ஓட்டு போட்டு பிறகு யாருக்கிட்ட கொடுக்கனும்… எவ்ளோ கொடுப்பாங்க”னு கேட்குறான்.

”அடேய் ஒழுங்கா ஓட்டு போட்டுட்டு… வீட்டுக்கு போ… யார்டயும் கொடுத்து அடி வாங்கிறத” சொல்லி போன கட் பண்ணிட்டேன்..

டோக்கன் கொடுத்து கொடுத்து கெடுத்து வச்சிருக்காங்க… அப்படி தானே?

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

ArulrajArun
ஜூலை மலர்களே… ஜூலை மலர்களே…
உங்கள் எதிரியாய்… ஒரு அழகி இருக்கிறாள்…

me ~எங்க இருக்கா நானும் தேடாத இடமில்ல பாக்காத பொண்ணு இல்ல

ℳsd இதயவன்
கேரளாவில் மூளையை உண்ணும் அமீபாவால் மூன்று பேர் உயிரிழப்பு
உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் அச்சம்~
அட இருங்கடா கொரோனாவுக்கே இன்னும் விடை தெரியாம இருக்கோம் ?!

ArulrajArun
உலகத்தில் ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் இந்தியா முதல் நபராக களமிறங்குகிறது ~ மோடி
சீனாவை பார்த்தா மட்டும் தான் பயம்ங்க மத்தபடி உலகத்துல எந்த பிரச்சனை வந்தாலும் முதல் ஆளா களமிறங்குகிறது நான் தான்ங்க …

Kirachand
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கை என்னவென்று சொல்வது? – எடப்பாடி பழனிசாமி
அதிமுக ஆட்சி மாதிரித்தான்னு சொல்றது!

balebalu
200, ₹500 ஆகிய ரூபாய் நோட்டுகளை ஒழித்து டிஜிட்டல் கரன்சியை ஊக்குவிக்க வேண்டும் – சந்திரபாபு நாயுடு

பிரதமர் நவ் இரவு 8 மணி செய்திக்கு நான் மட்டும் தான் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து கிட்டு இருந்தேன்
இனிமே இவரும் பங்கு போட வருவாரு போல

mohanram.ko
‘அடுத்தவர்களுக்காக குரல் கொடுப்பது’, டப்பிங் பேசுபவர்கள்

கடைநிலை ஊழியன்
மச்சான்.. எனக்கும் உங்க ஆபீஸ்ல ஏதாவது ஒரு வேலை வாங்கிதா டா..
எதுக்கு என்னையும் சேர்த்து வெளிய துரத்தவா..

Kirachand
ஏன்ணே அவனை அடிக்கிறீங்க?
உலகமே தன்னை உற்று நோக்குவதாக பிரதமர் மோடி சொல்றாரே, அதான் அவர் எல்லா கெட்டப்பும் போட்டுட்டாரே… அடுத்து அப்படி என்ன புது கெட்டப் போட்டுட்டு வருவாருன்னு கேட்கிறாம்பா…

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டிஜிட்டல் திண்ணை: விக்கிரவாண்டி இடைத் தேர்தல் எக்சிட் போல்… யாருக்கு எவ்வளவு ஓட்டு??

அம்பானி திருமணத்திற்கு வந்த முகமூடி நபர்கள் யார்? வைரல் வீடியோ!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : 2021 சட்டமன்ற தேர்தலை விட அதிக வாக்குப்பதிவு!

குணா ரீ ரிலீஸுக்கு தடை!

+1
0
+1
2
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0