காவல் நிலையத்திலேயே மாமூல்: உயர்நீதிமன்றம் வருத்தம்!

Published On:

| By Monisha

சட்டம்-ஒழுங்கு காவல் அதிகாரிகள் காவல் நிலையத்திலேயே மாமூல் வாங்குவதாக எழுந்துள்ள புகார்கள் வருத்தம் அளிக்கிறது என்று உயர் நீதிமன்ற நீதிபதி கூறியுள்ளார்.

தமிழக காவல் துறையின் ஆயுதப் படை உதவி ஆய்வாளர்களாக உள்ள முத்துக்குமாரன், பார்த்திபன், ரமேஷ், வெங்கடேஷ் ஆகியோர் சட்டம்- ஒழுங்கு பிரிவுக்கு மாற்றக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

ADVERTISEMENT

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணி முன்பு செப்டம்பர் 15 அன்று விசாரணைக்கு வந்தது.

காவல் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மனுதாரர்கள் 40 வயதைக் கடந்துவிட்டதாலும், மூவரும் துறை ரீதியான நடவடிக்கைகளை எதிர்கொண்டதாலும் அவர்களைச் சட்டம்- ஒழுங்கு பிரிவுக்கு மாற்ற முடியாது என்று வாதிட்டார்.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து, உயர்நீதிமன்ற நீதிபதி இந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், சட்டம்-ஒழுங்கு பிரிவு காவலர்கள், காவல் நிலையத்தில் மாமூல் வசூலிப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இது மிகவும் வருத்தமளிக்கிறது.

ADVERTISEMENT

சட்டம் ஒழுங்கு பிரிவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்வது உயரதிகாரிகளின் பொறுப்பு. சமீப காலங்களில் குற்றம் நடைபெறாமல் தடுப்பது குறைந்து விட்டது என்று நீதிபதி கூறினார்.

மேலும், நீதிபதி நேர்மை ஒழுக்கம் மற்றும் கண்ணியம் மிக முக்கியம் எனக் கருத்து தெரிவித்துள்ளார்.

நேர்மையானவர்களையும், ஒழுக்கமானவர்களை மட்டுமே சட்டம் ஒழுங்கு பிரிவில் நியமிக்க வேண்டும் என்று தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளார்.

மோனிஷா

காலை உணவுத் திட்டம்: அரசியல் கடந்து பாராட்டும் தலைவர்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share