பீகார் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தனிப்பெரும் கட்சியாக ஜேடியூவும் பாஜகவும் மாறி மாறி முன்னிலை வகிக்கின்றன. கடந்த 2020 தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த லாலுவின் ஆர்ஜேடி தற்போது 3-வது இடத்தில் உள்ளது.
பீகாரில் 2020 சட்டமன்ற தேர்தலில் லாலுவின் ஆர்ஜேடி 76 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக இருந்தது.
பாஜக 74 இடங்களிலும் ஜேடியூ 43 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன.
ஆனால் தற்போதைய தேர்தலில் ஜேடியூவும் பாஜகவும் மாறி மாறி தனிப்பெரும் கட்சியாக முன்னிலை வகிக்கின்றன. லாலுவின் ஆர்ஜேடி 3-வது இடத்தில்தான் இருந்து வருகிறது. இது ஆர்ஜேடி தலைவர்களுக்கு மிகப் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
