மஹுவா தொகுதியில் போட்டியிட்ட லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் பின்னடைவை சந்தித்துள்ளார்.
பீகார் சட்டமன்ற தேர்தலில் 243 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று ( நவம்பர் 14) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு நடந்த பீகார் சட்டமன்ற தேர்தலில் அம்மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ்வின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் ஜனசக்தி ஜனதா தளம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார்.
இந்நிலையில் தேஜ் பிரதாப் யாதவ் போட்டியிட்ட மஹுவா தொகுதியில் காலை 10 மணி நிலவரப்படி பின்னடைவை சந்தித்துள்ளார்.
இந்நிலையில் தேஜ் பிரதாப் யாதவ் போட்டியிட்ட மஹுவா தொகுதியில் 681 வாக்குகள் பெற்று 3ஆவது இடத்தில் உள்ளார்.
மஹுவா தொகுதியில் லோக் ஜனசக்தி கட்சி சார்பில் போட்டியிட்ட சஞ்சய் குமார் சிங் 3536 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் போட்டியிட்ட முகேஷ் குமார் ரௌஷன் 2127 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
இந்நிலையில் 12 மணி நிலவரப்படி தேஜ் பிரதாப் யாதவ் போட்டியிட்ட மஹுவா தொகுதியில் 4,941 வாக்குகள் பெற்று 4ஆவது இடத்தில் உள்ளார். பாஜக சார்பில் போட்டியிட்ட சஞ்சய் குமார் சிங் 22,703 வாக்குகள் பெற்று முதல் இடத்தில் உள்ளர். ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் போட்டியிட்ட முகேஷ் குமார் ரௌஷன் 15,919 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் வேட்பாளர் அமீத் குமார் 7,749 வாக்குகள் பெற்று 3ஆவது இடத்தில் உள்ளார்.
முன்னதாக கடந்த மே மாதம் தேஜ் பிரதாப் தனது பேஸ்புக் பக்கத்தில் இளம் பெண் ஒருவருடன் தொடர்பில் இருப்பதாக புகைப்படங்களை பகிர்ந்து இருந்தார். இதனால் தேஜ் பிரதாப் யாதவை கட்சியிலிருந்து ஆறு ஆண்டுகளுக்கு நீக்குவதாக லாலு பிரசாத் அறிவித்தார். மேலும் மகனுடன் ஆன அனைத்து குடும்ப உறவுகளையும் துண்டித்துக் கொள்வதாகவும் லாலு தெரிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து தேஜ் பிரதாப் தனிக்கட்சியை தொடங்கி சட்டமன்ற தேர்தலை சந்தித்துள்ளார்.
