நல்ல சீரியல்களை கொடுப்பதில் சன் டிவி மற்றும் விஜய் டிவிக்கு இடையே எப்பொழுதும் ஒருவித போட்டி இருக்கும். அந்த வகையில் இரு சேனல்களும் மாறி மாறி புதிய சீரியல்கள் பற்றிய அப்டேட்டை கொடுத்து வருகின்றன.
அந்த வகையில் விஜய் டிவியில் ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியல் நிறைவடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து யாரும் எதிர்பார்க்காத வண்ணம் ‘கிழக்கு வாசல்’ சீரியலும் நிறைவடைந்துள்ளது.
இதனையடுத்து இரண்டு புதிய சீரியல்களில் களம் இறங்குகிறது விஜய் டிவி. அதன்படி திரவியம், பார்வதி, விஸ்வநாதன், கிருஷ்ணவேணி ஆகியோர் நடிக்கும் ‘வீட்டுக்கு வீடு வாசப்படி’ என்ற சீரியலின் புரோமோ சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில் அடுத்த சீரியல் பற்றிய அதிரடி அப்டேட்டை விஜய் டிவி தற்பொழுது வெளியிட்டுள்ளது. ஈரமான ரோஜாவே சீரியலின் மூலம் பிரபலம் அடைந்த சித்தார்த் குமரன் நடிக்கும் இந்த சீரியலுக்கு ‘பனி விழும் மலர்வனம்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வினுஷா தேவி நடிக்கும் முதல் சீரியல் இது. அண்ணன் தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு இந்த சீரியல் உருவாக்கப்படுகிறதாம்.
இந்த சீரியலின் புரோமோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டுள்ளனர். யாரடி நீ மோகினி, ரெக்கை கட்டி பறக்குது மனசு, தேன்மொழி பி.ஏ, ஈரமான ரோஜாவே போன்ற சீரியல்கள் மூலம் இளம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் சித்தார்த்.
அவரது அடுத்த சீரியலுக்கு இப்பொழுதே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலும் சீக்கிரமே முடிவுக்கு வர இருக்கிறது என்ற கிசுகிசு பரவி வருகிறது. எனினும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மன்சூரை சேர்த்துக்கொள்ள தயங்கும் காங்கிரஸ் : ஏன்?
மலையாளத்தில் மாஸ் எண்ட்ரி கொடுக்கும் எஸ்.ஜே.சூர்யா