இந்தி திரையுலகில் ‘ஸ்டண்ட்’ காட்சிகளில் பெரும்பாலும் ‘டூப்’ பயன்படுத்தாதவர் என்ற பெயரைப் பெற்றவர் நடிகர் அக்ஷய்குமார்.
கிட்டத்தட்ட 34 ஆண்டுகளாக நாயகனாக நடித்து வரும் இவர், தான் நடிக்கும் ஆக்ஷன் படங்களை ரசிகர்கள் வெகுவாக ரசிப்பதாகவும் அதற்கு மதிப்பளிக்கும் வகையில் ‘ரிஸ்க்’ எடுத்து சண்டைக்காட்சிகளில் நடிப்பதாகவும் காரணம் கூறி வருகிறார்.
இதேபோல, இதர பாலிவுட் பிரபலங்களிடம் இருந்து அக்ஷய் குமாரை வேறுபடுத்துகிற ஒரு ‘பெரிய விஷயம்’ இருக்கிறது. அது, அவரது தினசரிச் செயல்பாட்டு நேரக் கட்டுப்பாடு.
அதிகாலையில் மூன்றரை மணிக்கெல்லம் எழும் வழக்கமுள்ள அக்ஷய் குமார், இரவு 9.30 மணிக்கு உறங்குபவர். ‘பாலிவுட்ல பொழுது விடியறது 12 மணிக்குதான்’ என்று தமிழ் திரையுலகைச் சேர்ந்த சில பிரபலங்கள் சொன்னதுண்டு.
அப்படியிருக்க, அக்ஷய்யின் இந்த வழக்கம் அங்கிருப்பவர்களுக்கு எந்தளவுக்கு ஒத்துவருகிறது என்று தெரியவில்லை.
இன்னொரு விஷயம், இவர் தினமும் இரவு உணவை மாலை 6.30க்கு முன்பே எடுத்துக்கொள்வாராம். பல ஆண்டுகளாக அதனை அவர் மாற்றவே இல்லை.
சமீபத்தில் ஒரு பட புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது இதற்குக் காரணம் கூறியிருக்கிறார் அக்ஷய் குமார்.
”ராத்திரி நாம தூங்குறப்போ கண்கள், கால்கள்னு உடம்புல இருக்குற எல்லா உறுப்புகளும் ஓய்வெடுக்கும். ரொம்ப லேட்டா சாப்பிடுறப்போ, குடல் மட்டும் அதனைச் செரிக்கறதுக்கான வேலை செஞ்சுகிட்டே இருக்கும். அது ஓய்வெடுக்கலாம்னு நினைக்கறப்போ, நாம கண் விழிச்சு அடுத்த நாள் வேலைய பார்க்க கிளம்பிடுவோம். இப்படி தொடர்ந்து ஓய்வே கொடுக்காம குடலை வேலை வாங்குனா என்ன ஆகும்?
அது மட்டுமில்ல. நம்ம உடம்புல வர்ற பல நோய்கள் வயித்துல இருந்துதான் ஆரம்பிக்குது. அதை நாம ஆரோக்கியமாக வச்சுக்கலேன்னா பல கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியிருக்கும். அதனால, உடம்பை பத்திரமா பார்த்துக்கணும்னு நினைக்கறவங்க சாயங்காலம் சீக்கிரமா டின்னர் சாப்பிடுற வழக்கத்தை பின்பற்றலாம்” என்று ‘அட்வைஸ்’ தந்திருக்கிறார்.
‘விளக்கு வச்ச பிறகு என்ன சாப்பாடு’ என்ற வார்த்தைகள் ஐம்பதாண்டுகளுக்கு முன் நம்மூரில் ரொம்பவே பிரபலமாக இருந்தது. வாழ்க்கை முறை மாற மாற, அந்த வார்த்தைகளும் காணாமல் போயிருக்கிறது.
அக்ஷய் குமார் மட்டுமில்லை, இன்னும் சில பிரபலங்களும் இந்த வழக்கத்தை இன்று வரை கடைப்பிடித்து வருகின்றனர். அதனால் இளமையாகவும் ஜொலிக்கின்றனர். அவர்களில் இருவர் நமக்கு ரொம்பவே தெரிந்த திரை பிரபலங்கள். அதிலொருவர் நம்மூர் விஜய்; இன்னொருவர் ‘கூலி’ வில்லன் புகழ் நாகார்ஜுனா