பல ரகங்களைக் கொண்ட மிளகாயும் காய்கறி வகையைச் சேர்ந்ததுதான் என்றால் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். மற்ற காய்கறிகளைத் தனித்தனியே சமைக்க முடியும்… மிளகாயை அப்படி முதன்மைப்படுத்திச் சமைத்து ருசிக்க முடியுமா என்பது பலரது கேள்வி. அதற்கு விடை சொல்லும் இந்த பஜ்ஜி மிளகாய் வெஜ் கைமா. சப்பாத்தி நடுவில் இந்த கைமா வைத்து சாப்பிடலாம். சாதத்துக்கும் இட்லி, தோசைக்கும் இது செம காம்பினேஷன்.
என்ன தேவை
பஜ்ஜி மிளகாய் – 4 (மிகவும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்)
வெங்காயம் – 2 (மிகவும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்)
தக்காளி – ஒன்று (மிகவும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்)
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை (அலசி ஆய்ந்தது) – 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப
அரைத்துக்கொள்ள…
சின்ன வெங்காயம் – 6 (தோல் உரிக்கவும்)
சோம்பு – ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை (அலசி ஆய்ந்தது) – 2 டேபிள்ஸ்பூன்
எப்படி செய்வது
அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் வெங்காயம், தக்காளியை வதக்கி, இஞ்சி – பூண்டு விழுது சேர்த்துக் கிளறி, பஜ்ஜி மிளகாய் போட்டுக் கிளறி, அரைத்த விழுது சேர்த்து, உப்பு போட்டுப் புரட்டவும்.
தீயைக் குறைத்து கரம் மசாலாத்தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்துப் புரட்டி வேகவிடவும். கொத்தமல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: வெஜ் ஸ்டஃப்டு மிளகாய் பஜ்ஜி
கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல்… சாப்பிடுவதற்கு சரியான நேரம் எது?