ஆயுர்வேதத்தில் செரிமான சக்தியை `அக்னி’ என்று குறிப்பிடுவார்கள். இந்த அக்னி சக்தி சூரியனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. சூரியன் உதயமாகும்போது செரிமான சக்தி மிதமாகவும், உச்சி வெயில் வரும் மதியம் 12 மணிக்கு செரிமான சக்தி உச்சத்திலும் இருக்கும்.
எனவே, காலை உணவை 7:00 முதல் 9:00 மணிக்குள்ளாகவும் மதிய உணவை காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையில் குறைந்தது 5 மணிநேர இடைவெளிவிட்டு மதியம் 12:00 மணி முதல் 2:00 மணிக்குள் உட்கொள்வது சீரான செரிமானத்துக்கு உதவி செய்யும். இரவு 7:00 மணி முதல் 9:00 மணிக்குள் இரவு உணவை சாப்பிட்டு முடித்திருக்க வேண்டும்.
இரவு தாமதமாகச் சாப்பிடுவதும், அதிக கலோரிகள் கொண்ட பிரியாணி போன்ற உணவுகளை உட்கொள்வதும் தவறு. இரவு 7 மணிக்கு மேல் ஹெவியான உணவுகளைச் சாப்பிடும்போது எளிதில் செரிமானம் ஆகாது. அதுவே கொழுப்பாக மாறும். குறிப்பாக 10 மணிக்குப் பிறகான இரவு உணவால் வயிற்றைச் சுற்றிலும் தொப்பை போடும். எடையும் கூடும். பல்வேறு உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : குஜராத் ஹோலி லட்டு
கிச்சன் கீர்த்தனா : முருங்கைக்காய் முந்திரி பொரியல்