திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற முயற்சி – பாஜக போலீஸிடையே வாக்குவாதம்!

Published On:

| By Kavi

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் உத்தரவிட்ட நிலையில், இந்து முன்னணியினரும், பாஜகவினர் மலை அடிவாரத்தில் குவிந்துள்ளனர்.

இந்நிலையில் கோயில் முன் குவிந்துள்ள பக்தர்களையும், தொண்டர்களையும் கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். கலைந்து செல்லவில்லை என்றால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.

ADVERTISEMENT

தொடர்ந்து பாஜகவினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கைது நடவடிக்கைக்கு தயாராக பேருந்தும் வரவழைக்கப்பட்டுள்ளது.

இந்தசூழலில் திருப்பரங்குன்றத்துக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும் வந்துள்ளார். அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் தமிழக மக்களுக்கு நீதி கிடைத்திருக்கிறது தீபத்தூணில் தீபம் ஏற்றுவதால் யாருக்கு என்ன பிரச்சனை ஏற்படும்?. பொது அமைதிக்கு யாரும் குந்தகம் விளைவிக்கவில்லை. நேற்றே தீபம் ஏற்றியிருந்தால் இவ்வளவு பிரச்சினை வந்திருக்காது” என்று கூறினார்.

ADVERTISEMENT

நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து மதுரை செல்லவிருந்த தமிழக பாஜக மூத்த தலைவரான ஹெச்.ராஜாவை திருப்பத்தூர் அருகே டிஎஸ்பி செல்வக்குமார் தடுத்து நிறுத்தினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share