டிஜிட்டல் திண்ணை: ஜிஆர் சுவாமிநாதனுக்கு எதிராக ’இம்பீச்மெண்ட்’ ஆயுதம்- ஸ்டாலின் உத்தரவு- பரபர திமுக!

Published On:

| By Mathi

Stalin GR Swaminathan

வைஃபை ஆன் செய்ததும், ”தும்பை விட்டு வாலை பிடிக்கிற கதைதான்” என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.

என்னப்பா தினுசா பழமொழி எல்லாம்?

ADVERTISEMENT

நடக்குறது எல்லாம் பார்த்தா அப்படிப்பட்ட பழமொழிதான் சொல்லனும் போல.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனுக்கு எதிராக மீண்டும் நிறைய கண்டனங்கள் வருதே.. அதைப்பத்திதான்..

திருப்பரங்குன்றம் கேஸா.. அதான் தமிழக அரசு மனு டிஸ்மிஸ் ஆகிடுச்சே?

ADVERTISEMENT

அதைபத்தி கடைசியா சொல்றேன்.. இப்ப எல்லோரும் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனை விமர்சிக்கிறாங்க.. திருமாவளவன் போன்றவங்க நாடாளுமன்றத்தில் இம்பீச்மெண்ட் தீர்மானத்தை இந்தியா கூட்டணி கொண்டு வரனும்னு சொல்றாங்க.. அதாவது நாடாளுமன்றத்துல இம்பீச்மெண்ட் என்கிற தீர்மானம் கொண்டு வந்து ஜிஆர் சுவாமிநாதனை நீதிபதி பதவியில இருந்து தகுதி நீக்கம் செய்யனுங்கிறதுதான் இப்ப ஹைலைட்டான கோரிக்கை..

ஏற்கனவே இதே மாதிரி ஒரு பேச்சு வந்ததே..?

ADVERTISEMENT

ஆமாய்யா.. சில மாதங்களுக்கு முன்னால வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கும் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனுக்கும் பெரும் மோதல் வெடிச்சது.. ஜாதி அடிப்படையில ஜிஆர் சுவாமிநாதன் தீர்ப்பு தருகிறார்னு விமர்சனம் எல்லாம் வந்துச்சு..

அப்ப, ஜிஆர் சுவாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்க வைக்கனும்னு சிஎம் ஸ்டாலின் உத்தரவுப்படி திமுகவும் களமிறங்குச்சு..

டெல்லியில 82 எம்.பிக்கள்கிட்ட கையெழுத்து வாங்கி ஆகஸ்ட் 12-ந் தேதி ஜனாதிபதிக்கும் தலைமை நீதிபதிக்கும் ஜிஆர் சுவாமிநாதன் மீது நடவடிக்கை எடுங்கன்னு மனு கொடுத்தாங்க..

அதுல, “ஜிஆர் சுவாமிநாதன் கொடுத்த சர்ச்சையான தீர்ப்புகள், ஒரு குறிப்பிட்ட ஜாதியினருக்கு சாதகமான தீர்ப்புகள், சுவாமிநாதன் உத்தரவுகளுக்கு நீதிபதிகளே கண்டனம் தெரிவிச்ச கேஸ்கள், நீதிமன்ற விசாரணைகளின் போது ‘வன்மத்தை’ கொட்டுற மாதிரி கருத்துகளை சொல்லிட்டாருன்னு சர்ச்சையான சம்பவங்கள்.. “இப்படி எல்லாத்தையும் விலாவாரியாக லிஸ்ட் போட்டு நடவடிக்கை எடுங்கன்னு சொல்லப்பட்டிருந்துச்சு..

ஆனால் அப்ப கொடுத்த மனு மீது இந்த நாள் வரைக்கும் ஜனாதிபதிகிட்ட இருந்தோ, தலைமை நீதிபதிகிட்ட இருந்தோ எந்த பதிலுமே வரலை.. எந்த ஒரு நடவடிக்கையுமே எடுக்கவும் இல்லை.. திமுக தரப்பும் அப்ப அதை கண்டுக்காம விட்டுருச்சு..

ஓஹோ.. இப்ப திமுக என்ன செய்யப் போகுதாம்?

எதுக்குய்யா அவசரம்.. சொல்றேன் பொறுங்கோ.. இப்ப திருப்பரங்குன்றம் கேஸில் தமிழக அரசுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவு போட்டாரு.. இந்த உத்தரவால திருப்பரங்குன்றத்துல டிசம்பர் 3-ந் தேதி ரொம்பவே பதற்றமாகிடுச்சு..கொஞ்சம் அஜாக்கிரதையா அரசு இருந்திருந்தா மத கலவரமே வெடிச்சிருக்கும்..

இன்னைக்கு கூட ஜிஆர் சுவாமிநாதனுக்கு எதிரான தமிழக அரசோட அப்பீல் மனுவும் டிஸ்மிஸ் ஆகிடுச்சு.. தமிழக அரசுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு கேஸை, ஜிஆர் சுவாமிநாதனே தொடர்ந்தும் விசாரிக்க போறாருன்னு மதுரை ஹைகோர்ட் பெஞ்ச் உத்தரவு போட்டிருக்கு..

இதைப் பத்தி சிஎம் ஸ்டாலின் இன்னைக்கு ரொம்பவே சீரியசாக டிஸ்கஷன் நடத்துனாரு.. அப்ப, “ஏற்கனவே ஜிஆர் சுவாமிநாதன் மீது நடவடிக்கை எடுகக் சொல்லி ஜனாதிபதி, தலைமை நீதிபதிகிட்ட மனு கொடுத்தோம்.. எந்த நடவடிக்கையும் எடுக்கலை.. நாமும் அப்படியே விட்டு விட்டோம்..

அதனால இப்ப நாடாளுமன்றத்துல ஜிஆர் சுவாமிநாதனுக்கு எதிராக இம்பீச்மெண்ட் தீர்மானம் கொண்டுவர சபாநாயகர்கிட்ட மனு கொடுப்போம்”னு சொல்லி இருக்கிறார் சிஎம் ஸ்டாலின் என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.

”பொதுவாகவே பார்லிமெண்ட்டுல இம்பீச்மெண்ட் தீர்மானம் கொண்டுவரனும்னா குறைஞ்சது 50 எம்.பிக்கள் கையெழுத்து போட்டு சபாநாயகர்கிட்ட கொடுக்கனும்.. அதனால இதை சீக்கிரமாகவும் சீரியசாகவும் செய்யனும்னு சீனியர் எம்.பிக்கள்கிட்ட சிஎம் ஸ்டாலின் சொல்லி இருக்கிறாரு” என்கின்றன அறிவாலய தகவல்கள்.

ஓஹோ.. ஆக்‌ஷன் மோடில் திமுக இறங்கிடுச்சுன்னு சொல்றீரா?

திமுக தலைமை ஆக்‌ஷன் மோடுக்கு இறங்கிடுச்சுதான்.. ஆனால் நாம சில எம்.பிக்கள்கிட்ட பேசுனப்ப, “இப்படித்தான் போன முறை கையெழுத்து வாங்கினாங்க.. அதை அப்படியே விட்டுட்டாங்க.. அன்னைக்கே சீரியஸாக இறங்கி ஜிஆர் சுவாமிநாதன் மேல நடவடிக்கை எடுக்க வெச்சிருந்தா இந்த அளவுக்கு ஆகியிருக்காது.. அரசுக்கும் இந்த அளவுக்கு நெருக்கடி வந்திருக்காதே.. இப்பவும் இம்பீச்மெண்ட் தீர்மானத்துக்காக நாங்க கையெழுத்து போட்டுட்டாலும் ஏதாவது நடக்குமான்னும் தெரியலை.. சந்தேகமாதான் இருக்கு” என தயக்கம் காட்டுறாங்களே என்றபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share