சூப்பர் ஸ்டார்களான ரஜினி காந்த் மற்றும் சல்மான் கானை வைத்து இயக்குநர் அட்லி ஒரு படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2013 ஆம் ஆண்டு ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அட்லி அறிமுகமாகி பல வெற்றி படங்களை இயக்கினார். நடிகர் விஜய் நடிப்பில் தெறி, மெர்சல் மற்றும் பிகில் என தொடர்ந்து 3 வெற்றிப் படங்களைக் கொடுத்தார்.
பின் சிறு இடைவேளைக்குப் பின் கடந்த ஆண்டு பாலிவுட்டில் இயக்குநர் அட்லி களம் இறங்கினார். அட்லி இயக்கி ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது.
வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இப்படம் உச்சத்தை தொட்டது. இதுவரை ஜவான் திரைப்படம் ரூ.1,000 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் வெற்றிக்கு பிறகு பாலிவுட்டின் கவனம் அட்லியின் மீது திரும்பியுள்ளது. அடுத்ததாக அட்லி, அல்லு அர்ஜுனை வைத்து படம் இயக்கப்போவதாக தகவல் வெளியாகிய நிலையில் தற்பொழுது மற்றொரு சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.
நம்மில் பலருக்கு திரையுலக சூப்பர் ஸ்டார்கள் ஒரே படத்தில் இணைந்து நடிக்க வேண்டும் என ஆசையாக இருக்கும். பாலிவுட்டை எடுத்துக் கொண்டால் ஷாருக்கான், சல்மான் கான் என்ற போட்டி எப்பொழுதும் இருக்கும். கோலிவுட்டை எடுத்துக் கொண்டால் ரஜினி, கமல், அஜித் மற்றும் விஜய் இடையே இருக்கும்.
ஆனால் இயக்குனர் அட்லி புதுவிதமாக பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான சல்மான் கானையும் , கோலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்தையும் ஒன்றாக வைத்து படம் இயக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது ஒரு ட்யுவல் ஹீரோ கதைக்களமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ சந்திப்புகள் அடுத்த மாதம் நடைபெறும் எனவும், இந்த படத்தை கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இப்படம் உருவானால், பாக்ஸ் ஆபீஸ் கலெக்சன்கள் சிதறடிக்கப்படும் என்பதால்… இச்செய்தி ரசிகர்களிடையே மாபெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
’கருடன்’ துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன்- எகிறுது எதிர்பார்ப்பு!
வன்னியர் இடஒதுக்கீடு: விளக்கமளித்த ஸ்டாலின்.. வெளிநடப்பு செய்த பாமக!