இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கும் புதிய படத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கிறார்.
சரவணா ஸ்டோர் விளம்பரங்களில் கலக்கிய லெஜண்ட் சரவணன் “தி லெஜண்ட்” படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்தப் படத்தை உல்லாசம், விசில் போன்ற படங்களை இயக்கிய ஜேடி – ஜெர்ரி இயக்கியிருந்தனர்.
இந்தப் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த நிலையில், கொடி, காக்கிச் சட்டை, கருடன் திரைப்படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில், இது தொடர்பான புகைப்படங்களை தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் துரை செந்தில் குமார் பகிர்ந்துள்ளார்.
இப்படத்தில் லெஜண்ட் சரவணன் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடிக்கிறார். லெஜண்ட் சரவணனின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சசிகுமார், சூரி நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளியான கருடன் திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. சூரியை வைத்து கருடன் படத்தில் அமர்க்களம் செய்த துரை. செந்தில்குமார், லெஜெண்ட் சரவணனை வைத்து என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வன்னியர் இடஒதுக்கீடு: விளக்கமளித்த ஸ்டாலின்.. வெளிநடப்பு செய்த பாமக!
கள்ளச்சாராய மரணத்தை திசை திருப்பவே சிபிஐ விசாரணை: ஆர்.எஸ்.பாரதி காட்டம்!
கதையும், சரியான திரைக்கதை ஆக்கமும்தான் ஒரு படத்தின் உயிர்நாடி- அதை மட்டும் சரியா செஞ்சுட்டா, யாரு வேணாலும் நடிக்கலாம்