நடிகர் தனுஷ் நடிக்கவுள்ள 50வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருக்கும் தனுஷ் நடிக்கவுள்ள 50வது படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது.
இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. மேலும் படம் குறித்த மற்ற அப்டேட்டுகள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் திருச்சிற்றம்பலம் படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக ரசிகர்கள் பலர் தங்களுக்கு ஷோபனா மாதிரி ஒரு தோழி வேண்டும் என்று பேசிக்கொண்டதையும் நாம் கேட்டிருப்போம்.

இதனால் அடுத்தடுத்த தனுஷ் படங்களின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்த நானே வருவேன் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யவில்லை.

தொடர்ந்து சமீப காலமாக தனுஷ் படம் குறித்த அப்டேட்ஸ் எதுவும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் வாத்தி படத்தின் இரண்டாவது பாடலான “நாடோடி மன்னன்” வெளியானது.
வாத்தி படம் வரும் பிப்ரவரி 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதுமட்டுமின்றி அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் “கேப்டன் மில்லர்” படத்தில் நடித்து வருகிறார்.

தொடர்ந்து தனுஷ் 50வது படத்தின் அப்டேட்டை கொடுத்துள்ளது சன் பிக்சர்ஸ்.
மோனிஷா
துறவியாக மாறிய பெரும் வைர வியாபாரியின் 9 வயது மகள்!
சரவெடி… அதிரடி… இரட்டை சதம்! : சுப்மன் கில் படைத்த சாதனைகளின் முழுப் பட்டியல்