”100 சதவீதம் துணிச்சலான முடிவு” – விஜய்யை முதன்முறையாக பாராட்டிய அஜித்

Published On:

| By christopher

ajith praised vijay political entry for first time

நடிகர் விஜய் அரசியல் நுழைந்துள்ளதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள நடிகர் அஜித்குமார், அதனை 100 சதவீதம் துணிச்சலான முடிவு என பாராட்டியுள்ளார். ajith praised vijay political entry for first time

நடிப்பிலும், கார் பந்தயத்திலும் தற்போது ஒரு சேர தீவிர ஆர்வம் காட்டி வருகிறார் நடிகர் அஜித் குமார்.

கலைத்துறைக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் ஆற்றி வரும் சேவையை பாராட்டி மத்திய அரசு சமீபத்தில் அவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கியது.

டெல்லியில் கடந்த மாதம் 28ஆம் தேதி நடந்த விழாவில், குடியரசுத்தலைவர் கையால் விருதை வாங்கிய அஜித் குமாருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்தியா டுடே ஆங்கில நாளிதழுக்கு தனது பிறந்த நாளையொட்டி அஜித் பேட்டி அளித்தார். அதில் அரசியல் குறித்து மனம் திறந்து அவர் பேசியுள்ளது பலரின் கவனத்தை பெற்றுள்ளது.

ajith praised vijay political entry for first time

குறிப்பாக தமிழ் முன்னணி நடிகரான விஜய் ’தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்து, 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வரும் நிலையில் அஜித்தின் அரசியல் பேச்சு பலரையும் உற்று நோக்க வைத்துள்ளது.

அப்பேட்டியில், ’நீங்கள் நடிகராகவும், கார் பந்தய வீரராகவும் ஜொலித்து வரும் நீங்கள் அரசியல் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? தமிழ்நாட்டில் சக நடிகர்கள் அரசியலுக்குள் நுழைவதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?’ என தொகுப்பாளினி அக்‌ஷிதா நந்தகோபால் கேள்வி எழுப்பினார்.

அதற்கு அஜித், “இல்லை, உண்மையில் எனக்கு அரசியல் லட்சியம் எதுவும் கிடையாது. ஆனால் என் சக நடிகர்கள் அரசியலில் ஆர்வம் காட்டுவதைப் பொறுத்தவரை, அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம், நான் அவர்களுக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அது அவர்களின் நம்பிக்கை. அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். ajith praised vijay political entry for first time

ஜனநாயகத்தின் சிறந்த விஷயம் என்னவென்றால், மக்கள் தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுக்க முடியும். எனவே, என்னுடைய நண்பர்கள் மட்டுமல்ல, அரசியலில் நுழைய விரும்பும் எவரும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நம்ப வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

அரசியலில் மக்களின் பிரதிநிதியாக பங்கேற்றுவது மிகப்பெரிய பொறுப்பாக கருதுகிறீர்களா? ஒரு நடிகர் தன்னுடைய ரசிகர்களை அரசியல் தொண்டர்களாக மாற்றுவதை எப்படி பார்க்கிறீர்கள்? ajith praised vijay political entry for first time

பொதுவாக ஒரு படத்தை பார்த்துவிட்டு, எளிதாக ’இந்த படத்தை இப்படி பண்ணியிருக்கலாம்‘, ’இப்படி செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்’ என்று சொல்ல முடியும். ஆனால் திரையுலகில் யாரும் மோசமான படத்தை எடுக்க விரும்பவில்லை என்பது தான் உண்மை. இங்கே அனைவரும் வெற்றிக்கான சூத்திரம் என்னவென்று அறிந்திருந்தால், ஒவ்வொரு படமும் ஹிட் ஆகும் தானே?

அரசியலிலும் அதேதான். வெளியில் இருந்து பார்த்து அதுகுறித்து பேசுவது எளிது. ஆனால் நீங்கள் களத்தில் இறங்கி போராடினால் மட்டுமே, மக்களின் பிரச்சனைகள் என்ன? ஒரு திட்டத்தை செயல்படுத்துவதில் இருக்கும் கஷ்டங்கள் என்ன? அதை எப்படி பிரச்சனையின்றி எளிதாக செயல்படுத்த முடியும்? என்பது உங்களுக்கு புரியும்.

நம் நாடு 1.4 பில்லியன் மக்கள், வெவ்வேறு மதங்கள், சாதிகள், மொழிகள் கொண்ட நாடு. நீங்கள் அனைவருக்கும் ஏற்ற தலைவராக இருக்க வேண்டும் என நினைத்தால் அது தவறு.

அரசியலில் மட்டுமல்ல நம் வாழ்க்கையின் எல்லா இடத்திலும் நல்லவர்களும் கெட்டவர்களும் இருக்கிறார்கள். நிறைய பேர் சரியான காரணங்களுக்காகவும், சிலர் தவறான காரணங்களுக்காகவும் அரசியலில் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும்.

அது மிகப்பெரிய பொறுப்பு! ajith praised vijay political entry for first time

நான் பத்மபூஷன் விருது பெற குடியரசுத்தலைவர் மாளிகைக்குள் அங்குள்ள நெறிமுறைகளைப் பின்பற்றி நுழைந்ததிலிருந்து, பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கடந்து சென்றதிலிருந்து, தலைவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் அனுபவிக்க வேண்டிய பொறுப்பின் சுமையை நான் உணர்ந்தேன். நான் அவர்களைப் பார்த்து பொறாமைப்படவில்லை. அது உண்மையில் கடினமான வேலை.

அதை சுமை என்று சொல்லவில்லை. ஒரு நாட்டை அல்லது ஒரு மாநிலத்தை தனது தோள்களில் சுமப்பது உண்மையில் மிகப்பெரிய பொறுப்பு. அதனால் தான் ஒருவர் அரசியலுக்குள் நுழைவதை 100 சதவீதம் துணிச்சலான முடிவு என கருதுகிறேன்” என அஜித் தெரிவித்துள்ளார். ajith praised vijay political entry for first time

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share