40 தொகுதிகளுக்கும் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று (மார்ச் 23) நியமித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக, அரசியல் கட்சியினர் தேர்தல் ஏற்பாடுகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், தமிழகத்தில் போட்டியிடும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.
இதனைத் தொடர்ந்து, இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை அதிமுக நியமித்துள்ளது.
அதன்படி, திருவள்ளூர் தொகுதிக்கு டாக்டர்.வேணுகோபால் தலைமையில் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
வடசென்னைக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தென்சென்னைக்குக் கோகுல இந்திரா, மத்திய சென்னைக்கு தமிழ்மகன் உசேன் ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, நீலகிரி தொகுதிகளுக்கு முன்னாள் அமைச்சர் வேலுமணி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் தொகுதிக்கு சீனிவாசன், திருச்சி தொகுதிக்கு விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
காஞ்சிபுரம் தொகுதிக்கு வளர்மதி, கிருஷ்ணகிரி தொகுதிக்கு கே.பி.முனுசாமி ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தேனி மற்றும் ராமநாதபுரம் தொகுதிக்கு ஆர்.பி.உதயகுமார் அதிமுக பணிக்குழு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், அதிமுக கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளுக்கும் சேர்த்து பணிக்குழு பொறுப்பாளர்களை அதிமுக நியமித்துள்ளது.
அதிமுக சார்பில் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் இன்று முதலே அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளுக்குச் சென்று தேர்தல் பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
”இசையில் குறுகிய அரசியலைக் கலக்காதீர்கள்” : டி.எம்.கிருஷ்ணாவுக்கு ஸ்டாலின் ஆதரவு!
CSK vs RCB: ‘ஆடாம ஜெயிச்சோமடா’… முதல் போட்டியில் தோனி படைத்த சாதனைகள்