அதிமுக மாசெக்கள் கூட்டம்… எடப்பாடி அறிவிப்பு!

Published On:

| By Selvam

aiadmk district secretaries meeting held

2026 சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக ஆயத்தமாகி வருகின்றன. எதிர்க்கட்சியான அதிமுக, பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளது. aiadmk district secretaries meeting held

இந்தநிலையில், வரும் மே 29, 30 ஆகிய தேதிகளில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மே 16) அறிவித்துள்ளார்.

அதன்படி, மே 29-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு புதுக்கோட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்கிறார்.

இதனை தொடர்ந்து அன்று மாலை 3.30 மணிக்கு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்ட நிர்வாகிகளுடனும்,

மே 30-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு திருப்பூர், கோவை, நீலகிரி, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் நிர்வாகிகளுடனும்,

அன்று மாலை 3.30 மணிக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகிகளுடனும் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்கிறார்.

இந்தக் கூட்டத்தின் போது, 2026 தேர்தலுக்கு ஆயத்தமாவது, பூத் கமிட்டியை வலுப்படுத்துவது, திண்ணைப் பிரச்சாரம் மேற்கொள்வது உள்ளிட்ட ஆலோசனைகளை எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளுக்கு வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. aiadmk district secretaries meeting held

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share