தளபதி விஜய் குறித்த கேள்விக்கு… மாளவிகா மோகனன் ஷார்ப் பதில்!

Published On:

| By Manjula

malavika mohanan thalapathy vijay

நடிகை மாளவிகா மோகனன் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில், சீயான் விக்ரமிற்கு ஜோடியாக தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று(ஜனவரி 19) தன்னுடைய எக்ஸ் தளத்தில் மாளவிகா ரசிகர்களுடன் #AskMalavika என்ற ஹேஷ்டேக்கில் கலந்துரையாடினார்.

ADVERTISEMENT

அதில் ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு மாளவிகா பதில் அளித்துள்ளார். மதுரையில் தனக்கு பிடித்த உணவு கறிதோசை, பிடித்த கலர் பிங்க், வண்ணத்து பூச்சிகளை கண்டால் பயம் என தெரிவித்தார்.

தேர்வுகள் என்றால் தனக்கு எப்போதும் பயம் என்று தெரிவித்த மாளவிகா, பிடித்த கிரிக்கெட் வீரர் யார்? என்ற கேள்விக்கு விராட் கோலி என பதில் அளித்தார்.

ADVERTISEMENT

இதேபோல உங்களின் பலவீனம் என்ன? என்ற ரசிகர் ஒருவரின் கேள்விக்கு, ”இனிப்பு வகைகள்” என நேர்மையாக ஒப்புக்கொண்டார்.

ரசிகர் ஒருவர் தங்கலான் படம் குறித்து கேட்டதற்கு,”கடின உழைப்பு” என ஒரே வார்த்தையில் பதில் அளித்தார்.

ADVERTISEMENT

இதேபோல ரசிகர் ஒருவர் விஜய் குறித்து கேட்டதற்கு, ” நண்பர்” மற்றும் ”வழிகாட்டி” என பதில் அளித்தார். அதற்கு கீழே இரண்டு வார்த்தைகள் என எனக்குத் தெரியும். ஆனால் அவருக்கு ஒரு வார்த்தை போதுமானது அல்ல என குறிப்பிட்டு இருந்தார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் தளபதி விஜயுடன் சேர்ந்து நீங்கள் மீண்டும் ஒரு படம் நடிக்க வேண்டும் என, மாளவிகாவிற்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

-மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி

தொகுதி உடன்பாடு, தேர்தல் அறிக்கை தயாரிக்க மதிமுக குழு அமைப்பு! 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share