நாடாளுமன்ற தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில், 31 பேர் கொண்ட தேர்தல் குழு அமைக்கப்பட்டுள்ளது.
திமுகவில் தேர்தல் அறிக்கை தயாரிக்க, கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த, நாடாளுமன்ற தேர்தல் ஒருங்கிணைப்பு என மூன்று குழுக்கள் நேற்று (ஜனவரி 19) அமைக்கப்பட்டது.
இந்தநிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தவும், தேர்தல் அறிக்கை தயாரிக்கவும் மதிமுக சார்பில் இன்று (ஜனவரி 20) குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
தொகுதி உடன்பாடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப்பட்ட குழு!
- ஆடிட்டர் ஆ.அர்ஜூனராஜ் -அவைத் தலைவர்
- மு.செந்திலதிபன் -பொருளாளர்
- ஆவடி இரா.அந்திரிதாஸ் -அரசியல் ஆய்வு மைய செயலாளர்
- வி.சேஷன் -தேர்தல் பணிச் செயலாளர்
தேர்தல் அறிக்கைத் தயாரிப்புக் குழு!
- தி.மு.இராசேந்திரன் -துணைப் பொதுச்செயலாளர்
- ஆ.வந்தியத்தேவன் – கொள்கை விளக்க அணி செயலாளர்
- வழக்கறிஞர் இரா.செந்தில்செல்வன் – தணிக்கைக் குழு உறுப்பினர்
- ப.த.ஆசைத்தம்பி – இளைஞரணி செயலாளர்
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நடிகையை 3-வது திருமணம் செய்த சானியா மிர்சாவின் கணவர்… அப்போ அது உண்மை தானா?
தமிழில் கம்பராமாயண பாராயணம்: ரசித்து கேட்ட பிரதமர் மோடி