ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர், மதியம் 2.08 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் வந்தடைந்தார் பிரதமர் மோடி .
மூன்று நாட்கள் பயணமாக தமிழகம் வந்த பிரதமர் மோடி இன்று (ஜனவரி 20) காலை திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். சாமி தரிசனத்திற்கு பின்னர் கம்ப ராமாயண பாராயணத்தை பிரதமர் மோடி கேட்டார்.
ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் முடித்ததும், மதியம் 1 மணியளவில் திருச்சியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் புறப்பட்டார். மதியம் 2.08 மணிக்கு பேய்க்கரும்பு பகுதியில் பிரதமர் மோடி பயணித்த ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது.
பேய்க்கரும்பில் இருந்து சாலை மார்க்கமாக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு பிரதமர் மோடி சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார். ராமநாதசுவாமி கோவிலிலும் ராமாயண பாராயணத்தை பிரதமர் மோடி கேட்க உள்ளார்.
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு ராமநாதசுவாமி கோவிலில் இன்று பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் ஐந்து அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தொகுதி உடன்பாடு, தேர்தல் அறிக்கை தயாரிக்க மதிமுக குழு அமைப்பு!
மீண்டும் பார்த்திபனின் புது முயற்சி: ‘TEENZ’ ஃபர்ஸ்ட் லுக்!