போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நடிகர்கள் ஶ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளது. Srikanth Krishna
கொகைன் போதைப் பொருளை பயன்படுத்தியதற்காக நடிகர்கள் ஶ்ரீகாந்த், கிருஷ்ணா கைது செய்யப்பட்டனர். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத், போதைப் பொருள் கும்பலைச் சேர்ந்த பிரவீன்குமார் ஆகியோர் மூலமாக கொகைன் போதைப் பொருளை நடிகர்கள் பெற்றனர் என்பது குற்றச்சாட்டு.
இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நடிகர்கள் ஶ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் கொடுத்தது.
நடிகர்கள் ஶ்ரீகாந்த், கிருஷ்ணா இருவரும் ரூ10,000 சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்; மேலும் இருவரும் அடுத்த உத்தரவு வரும் வரை விசாரணை அதிகாரி முன்பாக தினமும் ஆஜராக வேண்டும் என்பதும் சென்னை உயர்நீதிமன்றத்தின் நிபந்தனை.