STR50: சிம்புவை இயக்கப்போவது யாருன்னு பாருங்க!

Published On:

| By Manjula

simbu director for str50

நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர், நடனக்கலைஞர் என பல்துறை வித்தகரான சிம்பு இன்று(பிப்ரவரி 3) தன்னுடைய 41-வது பிறந்த நாளில் அடியெடுத்து வைத்துள்ளார்.

இதையொட்டி அவருக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்டோர் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனால் தற்போது #HBDSTR என்னும் ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

நேற்று (பிப்ரவரி 2) பிறந்தநாள் பரிசாக #STR48 படத்தில் சிம்புவின் மிரட்டலான இரட்டை லுக் வெளியாகி, ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

இந்த நிலையில் சிம்புவின் 5௦-வது படம் குறித்த புதிய தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன. அதன்படி தன்னுடைய 5௦-வது படத்தை சிம்புவே இயக்கி, நடிக்க போகிறாராம்.

சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்க இருப்பதாகவும், யுவன் ஷங்கர் ராஜாவிடம் இசையமைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அதோடு அவரின் 49-வது படத்தை முன்னணி இயக்குநர் ஒருவர் இயக்கப்போவதாகவும், தகவல்கள் வெளியாகி உள்ளன.

விரைவில் சிம்பு தன்னுடைய அடுத்தடுத்த படங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிடுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.

-மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

விலை குறைந்த தங்கம்: எவ்வளவுன்னு பாருங்க!

துல்கர் சல்மானின் “லக்கி பாஸ்கர்” அறிவிப்பு இதோ!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share