வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘வாத்தி’. இப்படம் ரூ.100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து மெகா பிளாக் பஸ்டர் படம் ஆக அமைந்தது.
அதன் பிறகு இயக்குநர் வெங்கி அட்லூரியின் அடுத்த படத்தில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்கிறார் என்று அறிவிப்பு வெளியானது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த படத்திற்கான படப்பிடிப்பும் தொடங்கப்பட்டது. இந்த படத்திற்கு “லக்கி பாஸ்கர்” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
சித்தாரா எண்டர்டெயின்மென்ட் மற்றும் ஃபார்ச்சூன் 24 ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்க, ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
தற்போது லக்கி பாஸ்கர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்று (பிப்ரவரி 3) லக்கி பாஸ்கர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மாலை 4.41 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை முன்னிட்டு வெளியான போஸ்டரில், நடிகர் துல்கர் சல்மான் ஒரு வங்கியின் நுழைவாயிலை நோக்கி நடந்து செல்வது போன்ற புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
சீதா ராமம் படத்திற்கு பிறகு துல்கர் சல்மான் நடிக்கும் இரண்டாவது தெலுங்கு படம் “லக்கி பாஸ்கர்” என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
இது பூனை இல்ல புலி: புகழின் Mr.Zoo Keeper டிரைலர்!
சமூகத்தில் அறிவாளிகளுக்கு மரியாதை இல்லை: ஷான் ரோல்டன் ஆதங்கம்!
வேலைவாய்ப்பு : மாநகராட்சி, நகராட்சிகளில் பணி!
அண்ணா நினைவு நாள்: திமுக அமைதிப் பேரணி!