தட்கல் டிக்கெட்டை புக் செய்வதற்கு ஜூலை 1 முதல் ஆதார் கட்டாயம் என்று ரயில்வே அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக் அறிவித்துள்ளது. Aadhaar mandatory for booking Tatkal tickets
இந்தியாவில் 4,111 மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள், 3,313 பயணிகள் ரயில்கள் மற்றும் 5,774 புறநகர் ரயில்கள் என 13,198 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவை சுமார் 7 ஆயிரம் ரயில் நிலையங்களை இணைக்கின்றன.
நாளொன்றுக்கு சுமார் 2.4 கோடி பேர் பயணிக்கின்றனர்.
இந்தநிலையில் ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பை ரயில்வே துறை வெளியிட்டுள்ளது.
தட்கல் ரயில் டிக்கெட்டுகளை புக் செய்ய ஆதார் கட்டாயமாக்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் கூறி வந்த நிலையில் எப்போது முதல் இது அமல்படுத்தப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது ரயில்வே அமைச்சகம்.
ரயில்களில் பயணம் மேற்கொள்ள பயண தேதிக்கு ஒருநாள் முன்பாக தட்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படுகிறது. இதுதவிர, ஐஆர்சிடிசி எனப்படும் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக இணைதளத்திலும் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம். அண்மையில் தட்கல் டிக்கெட் மோசடி தொடர்பாக, 2.5 கோடி போலி கணக்குகளை கண்டறிந்து ஐஆர்சிடிசி நீக்கியது.
புதிய தட்கல் விதிமுறைகள் 2025 Aadhaar mandatory for booking Tatkal tickets
இந்தசூழலில் ரயில்வே அமைச்சகம் ஜூன் 10ஆம் தேதியிட்ட அறிவிப்பில், “
ஜூலை 1 முதல், ரயில்வேயின் தட்கல் திட்டத்தின் கீழ் ரயில் டிக்கெட்டுகளை ஐஆர்சிடிசி வலைத்தளம் அல்லது மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்வதற்கு ஆதார் அங்கீகார செயல்முறையை முடித்த பயணிகளால் மட்டுமே புக் செய்ய முடியும்.
ஜூலை 15 முதல் ஆதார் உடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு ஓடிபி அனுப்பி வைக்கப்பட்டு சரிபார்ப்பு நடத்தப்பட்ட பிறகு பின்னர்தான் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும்
குளிர்சாதன வகுப்புகளுக்கு காலை 10.00 மணி முதல் காலை 10.30 மணி வரையிலும், குளிர்சாதனம் இல்லாத வகுப்புகளுக்கு காலை 11.00 மணி முதல் காலை 11.30 மணி வரையிலும் என அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள், தட்கல் பயணச்சீட்டுகளை அதன் திறப்பு நேரத்திலிருந்து முதல் 30 நிமிடங்களுக்கு முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்
.டிக்கெட்டுகளை சட்டவிரோதமாக விற்பது, உண்மையான பயனர்களைத் தடுக்கும் போலி ஐடிகள் போன்ற பல்வேறு காரணங்களால் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று ரயில்வே அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. Aadhaar mandatory for booking Tatkal tickets Aadhaar mandatory for booking Tatkal tickets