ஏர் இந்தியா விபத்தில் சிக்கிய விஜய் ரூபானி : எப்படியிருக்கிறார்?

Published On:

| By Kavi

ஏர் இந்தியா விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி சிக்கியிருப்பது உறுதியாகியுள்ளது. பயணிகள் லிஸ்டில் 12 ஆவது இடத்தில் விஜய் ரூபானி பெயர் இடம் பெற்றுள்ளது. Vijay Rupani met in Air India crash

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் விடுதி கட்டிடத்தின் மீது ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியது. அந்த விமானம் முற்றிலும் எரிந்து உருத் தெரியாமல் போயுள்ளது.

ADVERTISEMENT

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 130ஆக அதிகரித்துள்ளது. ஆனால் யாரும் அடையாளம் காணப்படவில்லை. 

இந்த விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் சிக்கியிருக்கிறார். லண்டன் செல்வதற்காக மதியம் 1.38 மணிக்கு புறப்பட்டு விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் விஜய் ரூபானியும் பயனித்ததாக தகவல்கள் வந்தன.

ADVERTISEMENT

ஆனால் அது தவறு என்றும் சொல்லப்பட்டது.

இந்தசூழலில் பயணிகளின் பட்டியலை ஏர் இந்தியா விமானம் வெளியிட்டுள்ளது. அதில் விஜய் ரூபானியின் பெயர் 12ஆவது இடத்தில் இடம் பெற்றுள்ளது. அவர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வருகின்றன. ஆனால் இது உறுதிப்படுத்தப்படவில்லை

ADVERTISEMENT

2016 முதல் 2021 வரை மாநில முதல்வராக விஜய் ரூபானி பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. Vijay Rupani met in Air India crash

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share