தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்தை விட்டு 5.05 லட்சம் பேர் விலகல்!

Published On:

| By Mathi

MGNREGA Scheme

தமிழ்நாட்டில் கடந்த 2023-24 ஆண்டை ஒப்பிடுகையில் 2024-25-ம் ஆண்டில் 5.05 லட்சம் பேர் 100 நாள் வேலை திட்டத்தில் இருந்து விலகி இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. MGNREGA Scheme

மாநிலங்களவையில் ஜூலை 22-ந் தேதி ஊரக மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் கம்லேஷ் பாஸ்வான் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் நிதியாண்டு 2024-25 இல் 74.34 லட்சம் பேர் வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளார்கள். நிதியாண்டு 2023-24 இல் இந்த எண்ணிக்கை 79.39 லட்சமாகவும், நிதியாண்டு 2022-23 இல் 75.79 லட்சமாகவும் இருந்தது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட ஊழியர்களின் திறன் தளத்தை மேம்படுத்துவதற்காக, இந்திய அரசு டிசம்பர் 2019 இல் “உன்னதி திட்டத்தை” (Project UNNATI) தொடங்கியது. ஊழியர்களின் திறன் தளத்தை மேம்படுத்துவதன் மூலம், இந்தத் திட்டம் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனால் அவர்கள் தற்போதைய பகுதி வேலைவாய்ப்பிலிருந்து சுயதொழில் அல்லது கூலி வேலைவாய்ப்பு மூலம் முழு வேலைவாய்ப்புக்கு மாற முடியும். இந்தத் திட்டம் 2 லட்சம் தொழிலாளர்களின் திறன் தளத்தை மேம்படுத்தும். மார்ச் 31, 2025 வரை 90,894 பேர் பயனடைந்துள்ளனர்.

இந்த 100 நாள் வேலை திட்டத்துக்கு

ADVERTISEMENT
  • 2022-23-ம் நிதி ஆண்டில் மத்திய அரசால் விடுவிக்கப்பட்ட தொகை ரூ. 9743.53 கோடி
  • 2023-24-ம் நிதி ஆண்டில் மத்திய அரசால் விடுவிக்கப்பட்ட தொகை ரூ 12616.53 கோடி

இவ்வாறு மத்திய இணை அமைச்சர் கம்லேஷ் பாஸ்வான் தெரிவித்தார்.

இந்த புள்ளி விவரங்களின் அடிப்படையில், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 100 நாள் வேலைத் திட்டத்தில் இருந்து 5.05 லட்சம் பேர் விலகி இருக்கின்றனர்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share