நண்டு பிடிக்க சென்ற இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த சோகம்!

Published On:

| By Minnambalam

நண்டு பிடிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் நகரில் அம்பாட்-சாத்பூர் இணைப்புச் சாலையில் அமைந்துள்ள சஞ்சீவி நகரில் எட்டு வயது சிறுவன் ஒருவன் மற்றும் 11 வயதுடைய இரண்டு சிறுவர்கள், தங்களின் வீட்டுக்கு அருகிலுள்ள குளத்திற்குச் சென்றனர். அப்போது இவர்கள் மூன்று பேரும் குளத்தில் இறங்கி நண்டுகளைப் பிடிக்க முயன்றபோது, 8 மற்றும் 11 வயதுடைய இரு சிறுவர்கள் குளத்தில் தவறி விழுந்தனர்.

ADVERTISEMENT

நீரின் ஆழம் தெரியாததால் அவர்கள் தண்ணீரில் மூழ்கினர். அவர்கள் நீரில் மூழ்கியதை பார்த்த சாலையில் சென்ற அந்த ஊரைச் சேர்ந்த சிலர் விரைந்து சென்று பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் கிடைத்ததும் சிறுவர்களின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும், சம்பவம் குறித்து போலீஸார் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்கள்.

அதன்பின்னர், போலீஸார் மற்றும் தீயணைப்பு படையினர் நீண்ட முயற்சிக்குப் பின் அவர்களின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ADVERTISEMENT

ஆனால், இரண்டு சிறுவர்களும் அதற்குள் உயிரிழந்துவிட்டனர் என மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அம்பாட் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு சிறுவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜ்

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: வாழையிலை மடக்கு

திமுக திடீர் நிபந்தனை… திருமாவளவன் ஷாக்… முறிவை நோக்கி கூட்டணி?

இருந்தாலும் அப்படி கேட்டுருக்க கூடாது: அப்டேட் குமாரு

ஆஸ்கருக்கு செல்லும் ‘லாபதா லேடீஸ்’!

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share