பிரபல சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான Xiaomi 2021 ஆம் ஆண்டு எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் அடியெடுத்து வைப்பதாக அறிவித்தது. கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் கார் எப்படி இருக்கும் என்பதற்கான படங்களையும் வெளியிட்டது. Xiaomi’s first electric car su7
அந்த புகைப்படங்களைப் பார்த்த சமுக வலைதளவாசிகள் இந்த கார் Tesla மற்றும் Porche ஆகிய இரண்டு கார்களின் கலவையாக இருக்கும் என, கருத்து தெரிவித்திருந்தனர். தற்போது அந்த காத்திருப்பு முடிவுக்கு வருகிறது என்று Xiaomi நிறுவனம்.
அதோடு வரும் மார்ச் 28 ஆம் தேதி சீனாவில் ஸ்பீடு அல்ட்ரா 7 (SU7) என்ற பெயரிடப்பட்டுள்ள ஜியோமி கார் விற்பனைக்கு வருகிறது என்றும் தெரிவித்துள்ளது. இதன் விலை விவரம், விற்பனை வெளியீட்டு நிகழ்வில் தெரியவரும் என்றும் அந்நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
SU7 எலக்ட்ரிக் காரின் சிறப்பம்சங்கள் :
220kW ரியர் வீல் டிரைவ் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது.
E-motor HyperEngine V8s உள்ளதால் அதிகபட்ச மோட்டார் வேகம் 27,200 rpm ஆகும்
வலுவான 425kW வெளியீடு மற்றும் 635Nm உச்ச முறுக்கு திறன் கொண்டிருக்கும்.
வெறும் 5.3 வினாடிகளில் காரை 0-100 கிலோமீட்டர் வேகத்தில் செலுத்தி க்ளோபல் ரெக்காட் செய்துள்ளதாக Xiaomi தெரிவித்துள்ளது.
அடாப்டிவ் BEV டெக்னாலஜி, ரோட்-மேப்பிங் வசதி உள்ளது.
SU7 ஆனது LiDAR, பதினொரு HD கேமராக்கள், மூன்று மில்லிமீட்டர் அலை ரேடார்கள் மற்றும் பன்னிரண்டு அல்ட்ராசோனிக் ரேடார்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
உட்புறத்தில் 16.1-இன்ச் 3K சென்ட்ரல் கன்சோல், 7.1-இன்ச் சுழலும் டாஷ்போர்டு மற்றும் 56-இன்ச் HUD (Heads-up display) உள்ளது.
கூடுதல் வசதி தேவைப்பட்டால் பின்புற இருக்கைகளில் 2 Tablet-களை பொறுத்திக் கொள்ளலாம்.
ஜியோமி நிறுவன சிஇஓ சொன்ன ரகசியம்!
இதற்கிடையே ஜியோமி நிறுவன சிஇஓ லீ ஜுன் SU7 கார் குறித்த ரகசியத்தையும் பகிர்ந்துள்ளார்.
அவர், ”இந்த கார் டெஸ்லா மற்றும் போர்ஷே ஆகிய நிறுவனங்களின் கார்களை விட அதிக ஆக்சலரேசன் வேகத்தை வழங்கும் திறன் கொண்டது. U7 கார்கள் வித்யாசமாக இருக்கும். இதற்கு ஸ்மார்ட் டெக்னாலஜி தான் முக்கிய காரணம்” என லீ ஜீன் தெரிவித்துள்ளார்.
SU7 எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை பெய்ஜிங்கில் அமைந்துள்ளது. ஒரு ஆண்டிற்கு 2 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது இந்த ஆலை. இதற்காக 10 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கி இருக்கிறது Xiaomi நிறுவனம். சீனா முழுவதும் இந்த கார்களை விற்பனை செய்ய 59 ஸ்டோர்களை 29 நகரங்களில் அமைத்துள்ளது.
சீனாவில் மார்ச் 28 ஆம் தேதி விற்பனைக்கு வரும் இந்த SU7 எலக்ட்ரிக் கார் ஆனது இந்தியாவில் எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்ற தகவல்கள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– பவித்ரா பலராமன்