பாஸ்டேக்: மீண்டும் வெளியான முக்கிய அறிவிப்பு!

Published On:

| By christopher

நெடுஞ்சாலைகளில் சுங்கக்கட்டணம் செலுத்த பேடிஎம் பாஸ்டேக் பயன்படுத்துவோர் நாளை (மார்ச் 15)  வேறு வங்கிக்கு மாற வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

விதிமீறல் புகார் எழுந்ததை அடுத்து பேடிஎம் பேமண்ட் வங்கி மீது பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது ரிசர்வ் வங்கி. பிப்ரவரி 29-ம் தேதிக்குப் பிறகு எந்தவொரு வாடிக்கையாளர் கணக்கிலும் டெபாசிட்கள், கடன் பரிவர்த்தனைகள் மற்றும் பாஸ்டேக் டாப்-அப்கள் செய்வதை நிறுத்துமாறு பேடிஎம் பேமண்ட் வங்கிக்கு ஆர்பிஐ உத்தரவிட்டது.

பயனர்களின் நலன் கருதி இந்த காலக்கெடு மார்ச் 15 வரை நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து டாப்-அப்கள், ப்ரீபெய்ட் கருவிகள், வாலட்கள், ஃபாஸ்டேக்குகள் மற்றும் பல்வேறு சேவைகள் தடை செய்யப்பட்டது. இதுகுறித்த அறிவிப்பு கடந்த பிப்ரவரி 19-ம் தேதி வெளியானது.

இந்த நிலையில், நாளை (மார்ச் 15) முதல் பேடிஎம் பாஸ்டேக் செல்லாது என்று மீண்டும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. பேடிஎம் பாஸ்டேக் வைத்திருப்போர், வரும் 15-ம் தேதிக்குள் இருப்புத் தொகையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மார்ச் 15-ம் தேதிக்குப் பிறகு ரீசார்ஜ் செய்ய முடியாது. மேலும், அபராதமின்றி சுங்கச்சாவடிகளை கடந்து செல்ல பேடிஎம் பாஸ்டேக் வைத்திருப்போர் வேறு வங்கிக்கு மாற வேண்டியது அவசியம் என்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்… 

ராஜ்

பியூட்டி டிப்ஸ்: சருமம் பளபளக்க… இந்த மூன்றே பொருட்கள் போதும்!

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா : காஞ்சிபுரம் இட்லி… மிளகு ஸ்பெஷல்!

திருக்கோவிலூர் வட போச்சே…. அப்டேட் குமாரு