பீகாரில் பாஜக கூட்டணிக்கு 200 இடங்களை அள்ளி கொடுத்த பெண்களுக்கான திட்டம்!

Published On:

| By Minnambalam Desk

பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, தேசிய ஜனநாயகக் கூட்டணி 243 தொகுதிகளில் 200க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றுள்ளது.

இந்த வெற்றிக்கு பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட முதலமைச்சர் மகிளா ரோஜ்கர் யோஜனா திட்டம் முக்கிய பங்கு வகித்துள்ளது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

ADVERTISEMENT

பீகார் தேர்தலில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 200-க்கும் அதிகமான இடங்கள் பாஜக கூட்டணி வசமாகி இருக்கின்றன. பீகார் தேர்தல் வரலாற்றிலேயே ஜேடியூ- பாஜக முதல் முறையாக மிகப் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றுள்ளன.

பீகார் அரசியல் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத படுதோல்வியை ஆர்ஜேடியும் காங்கிரஸும் சந்தித்துள்ளன.

ADVERTISEMENT

பீகாரில் ஆர்ஜேடி- ஜேடியூ வெற்றிக்கு பல்வேறு காரணிகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளே கூட, பெண்களுக்கு ரூ10,000 கடன் உதவி வழங்கும் திட்டம்தான் பாஜக கூட்டணி வெற்றிக்கு கை கொடுத்தது என்கின்றனர்.

பெண்களுக்கு ரூ10,000 திட்டம்

ADVERTISEMENT

மகிளா ரோஜ்கர் யோஜனா என்ற திட்டத்தை பிரதமர் மோடி, பீகார் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பதற்கு 10 நாட்களுக்கு முன்னதாக கடந்த செப்டம்பரில்தான் அறிவித்தார்.

ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் ஒரு பெண் சுய தொழில் தொடங்க ரூ10,000 கடனாக வழங்குவதுதான் இந்த திட்டம். இந்த பணம், பெண்களின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக வழங்கப்பட்டது.

இந்த தொகையை மேலும் ரூ2 லட்சமாக உயர்த்துவோம் என வாக்குறுதி அளிக்கப்பட்டது.

பீகாரில் 18 முதல் 60 வயதுக்குட்பட்ட பெண்கள், குறிப்பாக சுயஉதவிக்குழுக்களுடன் இணைந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. அதேபோல பெற்றோரை இழந்த, திருமணமாகாத வயது வந்த பெண்களுக்கும் இத்திட்டம் கை கொடுத்தது.

பீகாரில் மொத்தம் 75 லட்சம் பெண்களுக்கு ரூ.7,500 கோடி பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. இந்த பணம், சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போதும் கொடுக்கப்பட்டது என்பது காங்கிரஸின் புகார். தேர்தல் ஆணையத்திலும் கூட புகார் செய்தன. ஆனால் எங்கும் பதில் கிடைக்கவில்லை.

பீகாரில் முதல் பெண்களுக்கு கடன் உதவி வழங்கும் திட்டம் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி காலங்களில் சுய உதவிகளுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் சுழல் நிதி ஏற்கனவே வழங்கப்பட்டு வருகிறது; தற்போது மகளிர் உரிமைத் தொகை ரூ1,000 வழங்கப்படுகிறது; அரசு நகர்ப்புற பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம் அனுமதிக்கப்படுகிறது.. அரசு பள்ளிகளில் படித்து உயர் கல்வி கற்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ1,000 வழங்கும் திட்டம் என பல்வேறு திட்டங்கள் நடைமுறையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share