ஜாய் கிரிஸில்டா கொடுத்த புகாரில் நாளை (அக்டோபர் 15) மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிஸில்டா இருவரும் ஆஜராக மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கர்ப்பமாக்கிய நிலையில், தற்போது சேர்ந்து வாழ மறுப்பதாக ஜாய் கிரிஸில்டா தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.
இது குறித்து அவர் காவல் ஆணையர் அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளார். இந்த புகாரில் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என்று ஜாய் கிரிஸில்டா குற்றம் சாட்டி வருகிறார்.
கடந்த 8ம் தேதி ஜாய் கிரிஸில்டா மக்களவை உறுப்பினரும், வழக்கறிஞருமான சுதாவுடன் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். மேலும் தன்னைப்போல் 10க்கும் மேற்பட்ட பெண்களை மாதம்பட்டி ரங்கராஜ் ஏமாற்றி உள்ளதாகவும் குற்றம்சாட்டி இருந்தார்.
இதைத்தொடர்ந்து நாளை மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிஸில்டா இருவரும் ஆஜராக மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.