தமிழக அமைச்சரவையில் இன்று (மே 8) மீண்டும் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை ,தமிழக அமைச்சரவையில் நீர்வளத்துறை மட்டுமல்லாமல் கனிமம் மற்றும் சுரங்கத் துறை அமைச்சராக துரைமுருகனும், சட்டத்துறை அமைச்சராக எஸ்.ரகுபதியும் இருந்து வந்தனர். why duraimurugan mines portfolio changed
தற்போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் இருந்த கனிமங்கள், சுரங்கம் மற்றும் இயற்கை வளத்துறை சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு மாற்றி ஒதுக்கப்பட்டது. அமைச்சர் ரகுபதியிடம் இருந்த சட்டத்துறை துரைமுருகனுக்கு ஒதுக்கப்பட்டது.
மூத்த அமைச்சர் துரைமுருகனின் இலாகா மாற்றம் செய்யப்பட்டது திமுக வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
என்ன காரணம்?

“முதல்வர் ஸ்டாலின் இந்த மாதம் முழுக்க தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பம்பரமாக சுழண்டுவந்துகொண்டிருந்தார். என்ன காரணமாக இவ்வளவு பிசியாக இருக்கிறாரென்றால், அவர் ஒரு சின்ன ஓய்வுக்கு தயாராகியுள்ளார். அதாவது தேர்தல் நெருங்கிவிட்ட காரணத்தாலும் கட்சி பணிகள் அதிகமாகிவிட்ட காரணத்தாலும் கூடவே அரசாங்க நிமித்தமாக பல வேலைப்பளுக்கள் இருப்பதாலும் ஒரு சிறிய ஓய்விற்கு திட்டமிட்டுள்ளார்.
திருச்சியில் மிக பிரமாண்டமாக பேரூந்துநிலையம் ஒன்று கட்டிமுடிக்கப்பட்டுள்ளதை திறந்துவைத்துவிட்டு அப்படியே 12 ம் தேதி குடும்பத்தோடு நீலகிரி சென்று 5 நாட்கள் ஓய்வெடுக்கப்போகிறார்” என்று அதிகாரிகள் தரப்பிலிருந்து இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த 5 நாட்களில் 15 ம் தேதி அன்றைக்கு நீலகிரியில் மலர்கண்காட்சி திறந்து வைக்கிறதை தவிர வேற எந்த நிகழ்ச்சிக்கும் தன்னை கமிட் செய்ய வேண்டாம் என்று ரொம்பவே கறாராக சொல்லியிருக்கின்றார். இந்த ஓய்வு எதெற்கென்றால் தேர்தல் சம்பந்தமாக வேலைப்பளு அதிகமாக இருப்பதால் இன்னும் கொஞ்சம் முனைப்போடு செயல் பட இந்த ஓய்வு அவசியமென்று இந்த திட்டத்தை வைத்துள்ளதாகவும் சொல்கின்றனர்.
தற்போது நீலகிரிக்கு செல்லும் முதல்வர், 2021ல் தேர்தல் முடிவுகள் வந்த பிறகு கொடைக்கானலுக்கு ஓய்வுக்கு சென்றார். அதற்கும் தற்போது துரைமுருகன் இலாகா மாற்றத்துக்கும் என்ன சம்பந்தம் என்று தோணலாம் சம்பந்தம் நிறைய உள்ளது
2021ல் கொடைக்கானலுக்கு ஓய்வுக்கு சென்றவர் அங்கேயே அமைச்சர் பட்டியலை தயார் செய்துவிட்டு சென்னைக்கு திரும்பிய ஸ்டாலின், கட்சியின் பொது செயலாளர், மூத்த உறுப்பினர் கலைஞரோடு மிகவும் நெருக்கமாக இருந்தவருமான துரைமுருகனிடம், என்னென்ன துறை யாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்று மரியாதை நிமித்தமாக சொல்லவேண்டும் என்பதற்காக அவரை அழைத்து அந்த பட்டியலை காண்பித்தார்.
துரைமுருகன் அந்த பட்டியலை வாங்கி பார்த்ததுமே, அவர் முகத்தில் ஒரு அதிர்ச்சி. அந்த அதிர்ச்சி ஸ்டாலின் முன்பாகவே அப்பட்டமாக துரைமுருகன் முகத்தில் தெரிந்தது
ஏனென்றால் அந்த பட்டியலில் துரைமுருகனுக்கு நீர்வளத்துறை மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது அதற்குமுன் துரைமுருகன் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர். ஆனால் அந்த பொதுப்பணித்துறை பட்டியலில் அமைச்சர் எ.வ.வேலு பெயர் இருந்தது, அதைக்காட்டி ‘என்ன தம்பி எனக்கு நீர்வளத்துறை மட்டும் ஒதுக்கியிருக்கீங்க. நான் அவ்வளவு பெரிய துறையை கவனிச்சிட்டு வந்தேன். எனக்கு இப்படி சின்னதா நீர்வளத்துறையை மட்டும் கொடுத்திருக்கீங்களே’ என்று மனது வருத்தப்பட்டு கேட்டுள்ளார்
கட்சியில் உள்ள மூத்த அமைச்சர் அப்பாவோடு ஆரம்ப காலத்திலிருந்து இருந்தவர், இப்படி கேட்டுவிட்டாரே என்று அந்த பட்டியலில் தங்கம் தென்னரசுக்கு ஒதிக்கியிருந்த கனிமவளத்துறையை துரைமுருகனுக்கு கூடுதலாக ஒதுக்கினார் ஸ்டாலின்.
அந்த துறையை என்றைக்கு அவருக்கு ஒதுக்கினாரோ அன்றிலிருந்து தற்போதுவரை இந்த 4 வருடத்தில் கனிமவளத்துறையை துரைமுருகனிடமிருந்து திரும்ப பெறப்போகிறார் ஸ்டாலின் என்று அடிக்கடி செய்திகள் வந்துகொண்டே இருந்தது, இன்னொருபக்கம் அதற்கு வாய்ப்புகளும் இருந்தது, ஏனென்றால் துரைமுருகன் மீது சர்ச்சை அதிகமாகிக்கொண்டே இருந்தது.

புதுக்கோட்டை ராமச்சந்திரன் குரூப் மணல் காண்ட்ராக் எடுத்ததில் சர்ச்சை அதிகமாகி
அமலாக்கத் துறை, இதில் நுழைந்து எல்லா இடங்களிலும் மணல் குவாரியை ரெய்டு செய்து சாட்டிலைட் மூலமாக பல ஆவணங்களை திரட்டியது. தொடர்ந்து அது சம்பந்தமான அதிகாரிகள் முதல் அந்த மாவட்ட கலெக்டர் வரை அழைத்து விசாரணை செய்தது. இதற்காக சம்பந்தப்பட்ட ஆட்சியர்களும், தமிழக அரசும் உச்ச நீதிமன்றம் வரை சென்றன.
தற்போது கூட அந்த வழக்கு நிலுவையில்தான் உள்ளது. இந்த சர்ச்சையினால் ஸ்டாலின் திமுக எம்.பி.யும் திமுக முக்கிய பிரமுகருமான ஜெகத்ரட்சகனிடம் வருத்தப்பட்டு இப்படி பண்ணிட்டு இருக்காரு துரைமுருகன். இதுனால் பிரச்சனைகள் அதிமாகிக்கொண்டே இருக்கிறது. அவரால் இந்த துறையை கவனிக்க முடியவில்லை. அதனால் அவரை அந்த துறையில இருந்து மாற்றலாமென இருக்கேன் என்று பேசியுள்ளார்.
ஸ்டாலினிடம் உருக்கமாக பேசிய துரைமுருகன்
ஸ்டாலின் தன்னிடம் சொன்ன விஷயத்தை ஜெகத்ரட்சகன் துரைமுருகனிடம் சொல்லியிருக்கிறார். ஸ்டாலின் இப்படி வருத்தப்பட்டார் என்று சொன்னதுமே மறுநாள் காலையிலே வந்து ஸ்டாலினை சந்தித்து அவரோட பாணியிலேயே ரொம்ப உருக்கமாக பேசியிருக்கிறார் துரைமுருகன்.
இப்படி பேசி பேசியே, ஸ்டாலின் மனதில் வைத்திருந்த அந்த எண்ணத்தைதுரைமுருகன் மாற்றிவிடுவார். இது ஒருமுறை அல்ல 2 , 3 முறை அல்ல பலமுறை இப்படி நடந்துள்ளது. இதனால் இதுவரை துரைமுருகனை மாற்றாமல் இருந்த ஸ்டாலின், இப்போது இந்த முடிவை எடுத்துள்ளார்.
அதாவது, பொன்முடி சைவம் வைணவம் என்று பேசி சர்ச்சை ஆகி அதனால் அவருடைய பதவி பறிக்கப்பட்டது, அதேபோல் துரைமுருகனும் மாற்றுத்திறனாளிகளை பற்றி பேசி அதற்கு மன்னிப்பும் கேட்டார்.
ஒருவேளை அதை மனதில் வைத்துக்கொண்டு இந்த இலாகா மாற்றமா அல்லது அமலாக்கத் துறை அது இது என ரொம்ப நெருக்கடி கொடுக்கிறார்களே, அதற்காக இந்த மாற்றமா என்று பலவிதமாக பேசப்பட்டு வருகிறது.
“ஆனால் உண்மையாவே நடந்தது என்னவென்றால் மாநில சுயாட்சி வீரர் என நேரு ஸ்டேடியத்தில் முதல்வருக்கு ஒரு பெரிய பாராட்டு விழா எ.வ. வேலு ஏற்பாட்டில் நடந்தது. அதில் துரைமுருகனும் கலந்துகொண்டார். அதில் எதிர்பார்க்காத அளவிற்கு மாணவர்கள் கலந்துகொண்டனர். இதை பார்த்து ஸ்டாலின் மட்டுமல்ல அவர் குடும்பமே சந்தோசப்பட்டது
அதேசமயம் ஸ்டாலினுக்கு அந்த விழாவில் வருத்தம் என்னவென்றால் துரைமுருகன் அந்த விழாவில் தொடர்ந்து தூங்கிக்கொண்டே இருந்தார். இப்படி நிகழ்ச்சியில தூங்குறாரே மீடியா எல்லாம், பார்க்கிறதே என்று மேடையில இருந்த ஆ.ராசா அடிக்கடி அவரை தட்டி தட்டி யாருக்கும் தெரியாத மாதிரி எழுப்பிக்கொண்டே இருந்தார். ஆனாலும் எத்தனை தடவை எழுப்பினாலும் மறுபடி மறுபடி தூங்கிகொண்டே இருந்தார் துரைமுருகன். நிகழ்ச்சி முடியும் வரை இதை ஸ்டாலினும் கவனித்துக்கொண்டே இருந்தார். அவரின் இந்த செய்கையினால் ஸ்டாலினுக்கு சற்றே வருத்தமும் இருந்ததாக சொல்கின்றனர்” திமுக வட்டாரத்தில்.
உடல்நல பாதிப்பு why duraimurugan mines portfolio changed

இந்தசூழலில் நேற்று திமுக ஆட்சி 4 ஆண்டுகள் முடிந்து 5 ம் ஆண்டில் அடியெடுத்து வைத்தது. இதனால் கலைஞர் நினைவிடத்திற்கும் அண்ணா நினைவிடத்திற்கும் சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்த தயாரானார் ஸ்டாலின். இதற்காக தனது வாகனத்தில் ஸ்டாலின் ஏறியதும், துரைமுருகனும் முதல்வர் வாகனத்தில் ஏறுவதற்கு நீண்ட நேரமாக முயற்சிசெய்துகொண்டே இருந்தார்.
ஆனால் துரைமுருகனால் உடல்நிலை காரணமாக முதல்வர் செல்லக்கூடிய அந்த வாகனத்தில் ஏறவே முடியவில்லை. அதை பார்த்த ஸ்டாலின் அண்ணே, உங்களால் இந்த வாகனத்தில் ஏற சிரமமாக இருந்தால் ஒன்றும் பரவாயில்லை. நீங்கள் வீட்டில் ரெஸ்ட் எடுங்க…நாங்க: போய் மரியாதை செலுத்திவிட்டு வந்துவிடுகிறோம் என்று சொல்லி முதல்வர் அங்கிருந்து கிளம்பி சென்றார்.
மறந்துபோகும் துரைமுருகன் why duraimurugan mines portfolio changed
இதற்கிடையில் தலைமை செயலாளர் முருகானந்தம் மற்றும் முதல்வர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் ஸ்டாலினுக்கு ஒரு கம்ளைண்ட் ஃபார்வேர்ட் செய்தனர். அதில் கனிமவளதுறை மற்றும் நீர்வளத்துறையில இருந்து ஏகப்பட்ட கோப்புகள் கையெழுத்திடாமலே நிலுவையில் உள்ளதாகவும் இதற்கு துரைமுருகன் அதிக நேரம் எடுத்துக்கொள்கிறார் என்றும் அதை விட முக்கியமாக இந்த துறை பற்றிய விபரங்களை முதல்நாள் அவரோடு கலந்து பேசிவிட்டு மறுநாள் காலையில் சென்று அது சம்பந்தமாக அவரிடம் பேசும்பொழுது அப்படியா இதல்லாம் பேசினோமா? எப்போது பேசினோம்? என்று மறந்துவிட்டு முதலில்இருந்து கேட்கிறார் என்று சில புகார்களையும் அடுக்கினார்கள்
அதுமட்டும் இல்லாமல் கர்நாடகாவில் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த ஜனார்த்தனன் ரெட்டி சட்டவிரோதமான சுரங்கம் தோண்டி இரும்புத் தாது சுரங்கத்தை முழுவதுமாக மோசடி செய்த வழக்கில் ஆதாரங்களை மறைத்ததாகவும் சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து ஜனார்த்தனன் ரெட்டி உட்பட 4 பேருக்கு 7 வருடம் சிறை தண்டனை உறுதியாகி உள்ளது.

கர்நாடகாவை அடுத்து தமிழ்நாட்டிலும் இப்படி பல வழக்குகளை தோண்டி துருவி வருவதால் திமுக கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருக்கும் துரைமுருகன் பிரச்சனையில் சிக்கினால் இது தனிப்பட்டமுறையில ஏற்படுகிற பிரச்சனை தாண்டி கட்சியையும் இது பாதிக்கும் என்று நினைத்த ஸ்டாலின் இது சம்பந்தமாக துரைமுருகனுக்கு எடுத்து சொல்லியிருக்கிறார்.
அதாவது கனிவளத் துறையில நிறைய சர்ச்சை இருக்கிறது. உங்களுக்கும் உடம்பும் ஒத்துழைப்பதில்லை. நீங்கள் முதலில் உடல்நிலையை பார்த்துக்கொள்ளுங்கள். அதுதான் முக்கியம் என்று சொல்லி துரைமுருகனிடம் இருந்த கனிமவளம் உள்ளிட்ட துறைகளை வாங்கி ரகுபதிக்கு கொடுத்துட்டு அவரிடம் இருந்த சட்டத்துறையை துரைமுருகனுக்கு கொடுத்துள்ளார்.
ஆக துரைமுருகனோட இந்த இலாகா மாற்றத்துக்கு துரைமுருகனின் உடல்நிலை குறித்துதான் முடிவுசெய்யப்பட்டுள்ளது என்பது உறுதியாகியுள்ளது. why duraimurugan mines portfolio changed