பாஜக 4% தான்… போட்டி திமுக, அதிமுகவுக்கு இடையிலதான்! – எஸ்.பி. வேலுமணி

Published On:

| By Aara

கோவை, பொள்ளாச்சி, நீலகிரி தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் இன்று (மார்ச் 23) கோவையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய அதிமுகவின் கோவை மாவட்டச் செயலாளரும், தலைமை  நிலையச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி இந்தத் தேர்தலில் அதிமுகவுக்கும் திமுகவுக்கும்தான் போட்டி என்று  கூறியுள்ளார்.

“இங்கே சிலர் சோஷியல் மீடியாவில் வீடியோ போட்டுவிட்டு பெரிய ஆளாக காண்பித்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள். அவர்கள் எல்லாம் நம் வேட்பாளர்கள் முன்பு தூசுதான்.

நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசா,பாஜக சார்பில் மத்திய அமைச்சர் எல். முருகன் நிற்கிறார்கள். அதிமுகவில் சாதாரணமான வேட்பாளர் நிற்கிறார். ஆனால் அதிமுக வலுவான கட்சி.

அதேபோல கோவை நாடாளுமன்றத் தொகுதியில் அருமைத் தம்பி ராமச்சந்திரன் போட்டியிடுகிறார். எதிர்த்துப் போட்டியிடுவது யார்? கணபதி ராஜ் குமார்… அவர் யார்? நம்ம அம்மா மண்டலத் தலைவர், மேயர், மாவட்டச் செயலாளர்னு பல வாய்ப்புகளை கொடுத்தும் நமக்கு துரோகம் பண்ணிட்டு இங்கேர்ந்து போனவர்தான் திமுக வேட்பாளர். கோவை திமுகவுல வேட்பாளரா போட்டியிட  யாருமே இல்லை போல.

அடுத்தது அண்ணாமலை நிக்கிறாரு. அவர் போன முறை நம்ம கூட்டணியில கரூர்ல நின்னாரு. இப்ப கரூரை விட்டுட்டு கோவையில நிக்கிறாரு, ஏன்?  பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரைக்கும் 4% தான் ஓட்டு இருக்கு. அவங்க கூட சேர்ந்த கூட்டணி கட்சியான பாமகவுக்கு இங்க ஓட்டு இருக்குதா?

உண்மையான போட்டி திமுகவுக்கும் அதிமுகவுக்கும்தான். இது விவரமானவங்களுக்கு தெரியும்.
அதிமுக உலகத்துலயே 7 ஆவது பெரிய கட்சி. இரண்டு கோடி உறுப்பினர்கள் இருக்காங்க. 33-34% சதவிகிதம் வாக்கு கொண்ட பெரிய கட்சி அதிமுக. இதுதான் தேர்தல் கணக்கு. இதுதான் ஃபீல்டுல நடக்குறது. சும்மா வாட்ஸ் அப்ல வீடியோ போட்டா போதுமா?”  என்று கேள்வி கேட்டார் எஸ்.பி. வேலுமணி.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வேந்தன்

Heatwave: சட்டென மாறிய வானிலை… இங்க தான் ‘வெயில்’ கொளுத்துதாம்!

மதுபான வழக்கு: கவிதாவுக்கு ED கஸ்டடி நீட்டிப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share