தமிழ்நாட்டில் அதிகம் மற்றும் குறைவான வெப்பநிலை பதிவான இடங்கள் குறித்து, வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இன்று (மார்ச் 23) தொடங்கி வருகின்ற மார்ச் 29 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
இன்று தொடங்கி மார்ச் 27 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்பநிலை படிப்படியாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும்.
தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் (மார்ச் 24) அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்.
சுற்றி நின்று ஊரே பார்க்க… ஜாலியாக ஆடிய கோலி… என்ன பாட்டுக்குன்னு பாருங்க!
இதனால் ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்)
கோழிப்போர்விளை (கன்னியாகுமரி), கன்னியாகுமரி (கன்னியாகுமரி), காயல்பட்டினம் (தூத்துக்குடி) தலா 5 சென்டிமீட்டர். ஊத்து (திருநெல்வேலி), தக்கலை (கன்னியாகுமரி), இரணியல் (கன்னியாகுமரி), மாஞ்சோலை (திருநெல்வேலி) தலா 2 சென்டிமீட்டர்.
ராதாபுரம் (திருநெல்வேலி), குலசேகரப்பட்டினம் (தூத்துக்குடி), அடையாமடை (கன்னியாகுமரி), அழகரை எஸ்டேட் (நீலகிரி) 1 சென்டிமீட்டர். பழைய தாலுகா அலுவலகம் ஸ்ரீவைண்டம் (தூத்துக்குடி) தலா 1 சென்டிமீட்டர். மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவுமில்லை”, இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல தமிழ்நாட்டில் அதிகம் மற்றும் குறைவான வெப்பம் பதிவான இடங்கள் குறித்தும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ஈரோடு (39 டிகிரி) மாவட்டத்தில் அதிக வெப்பநிலையும், நாமக்கல் (18 டிகிரி) மாவட்டத்தில் குறைவான வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மதுபான வழக்கு: கவிதாவுக்கு கஸ்டடி நீட்டிப்பு!
விஜயபாஸ்கர் வழக்கு: குற்றப்பத்திரிக்கை நகல் கேட்டு அமலாக்கத்துறை மனு!