பெங்களூரு வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ), கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் கன்னட நடிகை ரன்யா ராவை கைது செய்து அவரிடம் இருந்து 14.8 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தது.
கடந்த திங்கட்கிழமை இரவு துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானத்தில் பெங்களூரு வந்த ரன்யா, அடிக்கடி சர்வதேச பயணங்கள் மேற்கொண்டதால், டி.ஆர்.ஐ கண்காணிப்பில் இருந்தார் என்பது அவருக்கே தெரியாதது. அதாவது, கடைசி 15 நாட்களில் மட்டும் நான்கு முறை அவர் துபாய்க்கு பயணம் மேற்கொண்டிருந்தார். நான்காவது முறை அவர் துபாய்க்கு சென்று விட்டு மார்ச் 3 ஆம் தேதி பெங்களூரு திரும்பிய போது கண்கொத்தி பாம்பாக இருந்த டி.ஆர்.ஐ அதிகாரிகள் அவரை தட்டி தூக்கினர். அவரிடத்தில் இருந்து 14.8 தங்கம் கைப்பற்றப்பட்டது. Who Is Ranya Rao
பெரும்பாலான தங்கத்தை கண்ணுக்குத் தெரியாமல் அவர் உடலில் அணிந்திருந்ததாகவும், தனது ஆடைகளில் தங்கக் கட்டிகளை மறைத்து வைத்திருந்ததாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். ரன்யாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.12 கோடி என்கிறார்கள்.
கர்நாடகாவில் பணியாற்றும் டிஜிபி அந்தஸ்து கொண்ட ஐபிஎஸ் அதிகாரியின் வளர்ப்பு மகள் ரன்யா, முதற்கட்ட விசாரணையில், விமான நிலையத்திற்கு வந்ததும், தன்னை டி.ஜி.பி-யின் மகள் என்று கூறிக்கொள்வார். பின்னர், உள்ளூர் காவல்துறையினரை அழைத்து தன்னை தனது வீட்டிற்கு கொண்டு செல்ல கூறுவார். இவரது வளப்பு தந்தை ராமச்சந்திரன் ராவ் டி.ஜி.பி அந்தஸ்து கொண்ட ஐ.பி.எஸ் அதிகாரி ஆவார். கர்நாடக காவல்துறையில் ஹவுசிங் கார்ப்பரேஷனில் பணியாற்றி வருகிறார்.
‘மாணிக்யா’ படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சுதீப்புக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமான ரன்யா, தமிழில் விக்ரம் பிரபுவின் வாகா திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ரன்யா பெங்களூருவில் உள்ள டி.ஆர்.ஐ தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை செய்யப்பட்டார். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாட்கள் ரிமாண்டில் வைக்கப்பட்டார்.