இயக்குனர் ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ஜப்பான், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய படங்கள் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள “ரெய்டு” படமும் தீபாவளி ரேஸில் இணைந்திருக்கிறது.
ஜெயிலர் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கன்னட நடிகர் சிவராஜ்குமார். இவரது நடிப்பில் 2018 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியாகி மிகப் பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படம் “Tagaru”.
இந்த படத்தின் தமிழ் ரீமேக் தான் தற்போது விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள “ரெய்டு”. இந்த படத்தின் டீசர் மார்ச் மாதம் வெளியானது.
இந்த படத்தில் விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்திருக்கிறார். 2017ஆம் ஆண்டு வெளியான சங்கிலி புங்கிலி கதவ தொற படம் தான் ஸ்ரீதிவ்யாவிற்கு தமிழில் வெளியான கடைசி படம்.
அதன் பிறகு ஸ்ரீ திவ்யா எந்த தமிழ் படத்திலும் நடிக்காமலே இருந்தார். 2022 ஆம் ஆண்டு ப்ரித்வி ராஜ் நடிப்பில் மலையாளத்தில் வெளியான ஜன கன மன படத்தில் நடித்திருந்தார்.
தற்போது தீபாவளிக்கு வெளியாக இருக்கும் ரெய்டு படம் ஸ்ரீதிவ்யாவுக்கு மீண்டும் தமிழ் சினிமாவில் புதிய வாய்ப்புகளை உருவாக்கி தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் சமீபத்தில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற உள்ள படம் இறுகப்பற்று. இதனை தொடர்ந்து ரெய்டு படமும் விக்ரம் பிரபுவிற்கு ஒரு பக்கா கம் பேக் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
தமிழகம் வரும் சோனியா காந்தி: பயண திட்டம் இதுதான்!
ஜி.வி.பிரகாஷுக்கு கதை எழுதும் யோகி பாபு
செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் நீட்டிப்பு!
கொசு தொல்லை: புகாரளிக்க உதவி எண்கள்!