IAS TRANSFER : எந்தெந்த துறை செயலாளர்கள், ஆணையர்கள் மாற்றம்?

Published On:

| By Kavi

Which department secretaries and commissioners changed

தமிழகத்தில் 55 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் இன்று (ஜூன் 23) உத்தரவிட்டுள்ளார். Which department secretaries and commissioners changed

பல்வேறு துறை அரசு செயலாளர்கள், மாநகராட்சி ஆணையர்கள், மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழக இயக்குனர் ஷில்பா பிரபாகர், வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளராகவும், 

தமிழ்நாடு நகர்புற வளர்ச்சி நிதியம் தலைவரும் மற்றும் மேலாண்மை இயக்குனரான விஜயகுமார், நில சீர்திருத்த ஆணையராகவும், 

அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர், சமூக சீர்திருத்த துறை செயலாளராகவும், 

நிதித்துறை செயலாளர்(செலவினம்) நாகராஜன் , வணிகவரி ஆணையராகவும், 

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குனர் சங்கர் உயர்கல்வித்துறை செயலாளராகவும், 

உயர்கல்வித் துறை செயலாளர் சமயமூர்த்தி, மனிதவள மேலாண்மை துறை செயலாளராகவும், 

மனிதவள மேலாண்மை துறை முதன்மை செயலாளர் பிரகாஷ், சென்னை பெருநகர வளர்ச்சி குழும முதன்மைச் செயலாளராகவும், 

சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர் பிரபாகர், தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்துக்கும், 

ஒன்றிய அரசு பணியில் இருந்து திரும்பும் வெங்கடேஷ், நிதித்துறை சிறப்பு செயலாளராகவும், 

சமூக நல ஆணையர் லில்லி போக்குவரத்து துறை சிறப்பு செயலாளராகவும்,.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சிறப்பு செயலாளர் கணேஷ், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வளங்கள் துறை சிறப்பு செயலாளராகவும், 

ராமநாதபுரம் மாவட்டம் ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலரான கூடுதல் ஆட்சியர் வீர் பிரதாப் சிங், சென்னை பொதுத்துறை துணைச் செயலாளராகவும் (மரபு), 

சென்னை பொதுத்துறை இணை செயலாளர் கே.எம். சரயு, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை இணைச் செயலாளராகவும், 

உயர்கல்வித் துறை இணைச் செயலாளர் துரை ரவிச்சந்திரன், தமிழ்நாடு நீர்வடிப் பகுதி மேம்பாட்டு முகாமையின் துணைத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராகவும், 

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வளங்கள் துறை இணைச் செயலாளர் கற்பகம், உயர்கல்வித்துறை இணைச் செயலாளராகவும், 

சிறப்பு திட்ட செயலாாக்கத்துறை கூடுதல் செயலாளர் ஷஜீவனா, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குனராகவும், 

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குனர் ஸ்ரேயா சிங், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குனராகவும், 

நில அளவை மற்றும் நிலவரித் திட்ட துறை இயக்குனர் மதுசூதனன் ரெட்டி, நகராட்சி நிர்வாக இயக்குனராகவும், 

நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு, தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி நிதியத்தின் மேலாண்மை இயக்குனராகவும், 

பெருநகர சென்னை மாநகராட்சி இணை ஆணையர் (கல்வி) விஜயராணி, தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராகவும், 

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ், தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகத்தின் இயக்குனராகவும்,

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் லால்ரிண்டிகி பச்சாவ், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் செயலாளராகவும், 

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா, சிறப்பு திட்ட செயலாக்கத் துறை கூடுதல் செயலாளராகவும், 

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், சென்னை  மாநகராட்சி இணை ஆணையராகவும்

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் செயல் இயக்குனர் சினேகா, செங்கல்பட்டு ஆட்சியராகவும், 

சென்னை மாநகராட்சி வட்டாரத் துணை ஆணையர் பிரவீன் குமார், மதுரை ஆட்சியராகவும், 

பெருநகர சென்னை வட்டார துணை ஆணையர் (தெற்கு) அமித், திருப்பூர் மாநகராட்சி ஆணையராகவும், 

நீலகிரி மாவட்டம் உதகை திட்ட அலுவலர் கௌஷிக், சென்னை மாநகராட்சி வட்டார துணை ஆணையராகவும்,

மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட அலுவலர் மோனிகா ராணா, திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராகவும், 

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன், திருச்சி மாநகராட்சி ஆணையராகவும், 

கோவை வணிகவரி இணைய ஆணையர் பானோத் ம்ரூகேந்தர் லால், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராகவும், 

கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் சரண்யா, ஆவடி மாநகராட்சி ஆணையராகவும், 

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை கூடுதல் ஆணையர் அனாமிகா, சென்னை நகராட்சி நிர்வாக இணை ஆணையராகவும், 

சென்னை நகராட்சி நிர்வாக இணை ஆணையர் ஆதித்ய நீலம், சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி கூடுதல் ஆணையராகவும்,

புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் அப்தாப் ரசூல், பெருநகர சென்னை மாநகராட்சி தெற்கு வட்டார துணை ஆணையராகவும்,

நாகர்கோயில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, ஓசூர் மாநகராட்சி ஆணையராகவும், 

ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் அரபித் ஜெயின், கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலராகவும், 

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சார் ஆட்சியர் பல்லவி வர்மா, திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலராகவும், 

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கவுர், நீலகிரி மாவட்டம் உதகை மண்டலம் – மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலராகவும், 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சார் ஆட்சியர் திவ்யான்ஷீ நிகம், தமிழ்நாடு மின் ஆளுமை முகமை இயக்குனராகவும்,

தமிழ்நாடு மின் ஆளுமை முகமை இயக்குனர் கோவிந்தராவ், தமிழ்நாடு மின் உற்பத்தி நிறுவன மேலாண்மை இயக்குனராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். Which department secretaries and commissioners changed

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share