நீட் மாதிரி தேர்வில் குறைவான மார்க்.. மகளை அடித்தே கொன்ற தந்தை!

Published On:

| By Minnambalam Desk

Maharashtra Neet

மகாராஷ்டிரா மாநிலத்தில் நீட் மாதிரி நுழைவுத் தேர்வில் மிக குறைவான மதிப்பெண்கள் பெற்ற மகளை தந்தை அடித்தே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு தர வேண்டும் என்பது தமிழகத்தின் கோரிக்கை. NEET Mock Exam

ADVERTISEMENT

நீட் நுழைவுத் தேர்வில் முறைகேடுகளும் அதிகரித்து பல வழக்குகளும் நடைபெற்று வருகின்றன. நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற முடியாத மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் நீட் மாதிரி நுழைவுத் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதற்காக மகளை தந்தை அடித்தே கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிராவின் சாங்லி மாவட்டத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மகளை அடித்து கொன்ற தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.

ADVERTISEMENT
Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share