ஆவணி மாத நட்சத்திர பலன் – விசாகம்!  (17.8.2024 முதல் 16.9.2024 வரை)

Published On:

| By Selvam

யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

அடக்கமாக இருந்தால் அனுகூலங்கள் ஏற்படக்கூடிய காலகட்டம். அலுவலகத்தில் நேரடி கவனமும் திட்டமிடலும் மிக மிக முக்கியம். உடனிருப்போர் குறையை பெரிதுபடுத்த வேண்டாம்.

பணத்தைக் கையாள்வதில் நிதானம் முக்கியம்.

குடும்பத்து உறவுகளிடம் குதர்க்கப் பேச்சு கூடாது. தம்பதியர் இடையே மூன்றாம் நபர் மத்தியஸ்தத்திற்கு இடம்தர வேண்டாம். வாழ்க்கைத் துணை வார்த்தைகளுக்கு மதிப்பளியுங்கள். கொடுக்கல் வாங்கலை நேரடி கவனத்தோடு செய்யுங்கள்.

சிலருக்கு திடீர் அதிர்ஷ்டத்தால் பொருள் சேரும். செய்யும் தொழிலில் நேரடி கவனமும் நேர்மையும் தேவை. புதிய முதலீடுகளில் அவசரம் தவிருங்கள்.

அரசு, அரசியல் சார்ந்தவங்களுக்கு பொறுப்பு அதிகரிக்கும்.

கலை, படைப்புத் துறையினர், கவனத்தை சிதறவிடாமல் இருப்பது முக்கியம்.

மாணவர்கள் பெற்றோர் ஆசிரியர் வழிகாட்டலைக் கேளுங்கள்.

தினமும் சிறிது நேரமாவது குலதெய்வத்தை  கும்பிடுங்கள்.

இரவு நேரப் பயணத்தில் இருட்டில் இறங்க வேண்டாம்.

மனஅழுத்தம், ரத்த அழுத்த மாற்றம், நரம்பு உபாதைகள் வரலாம்.  முருகன் வழிபாடு முன்னேற்றம் தரும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சிப்காட் மெகா குடியிருப்பு… “தொழில் வளர்ச்சியில் தனிக்கவனம்” – ஸ்டாலின் பேச்சு!

ஆவணி மாத நட்சத்திர பலன் – சுவாதி!  (17.8.2024 முதல் 16.9.2024 வரை)

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share