நடிகர் விஜய் தனது X தள பக்கத்தில் ‘கோட்’ எனப் பதியப்பட்ட தங்க மோதிரத்தை அணிந்தவாறு வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் தன் விரலில் ‘GOAT’ எனப் பதியப்பட்ட தங்க மோதிரத்தை அணிந்திருக்கும் புகைப்படத்தை இன்று (அக்டோபர் 4) தனது X தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்தப் புகைப்படம் வைரலாகியும் வருகிறது.
இந்த நிலையில், அந்த மோதிரத்தை விஜய்க்கு தயாரிப்பாளர் ‘அம்மா கிரியேசன்ஸ்’ சிவா தான் பரிசளித்துள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘கோட்’ திரைப்படத்தில் தயாரிப்பாளர் சிவாவும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
’கோட்’ திரைப்படத்தில் பாக்ஸ் ஆஃபிஸ் சாதனையை கொண்டாடும் வகையிலும், நடிகர் விஜய்யின் மீது தனக்கு இருக்கும் அன்பின் வெளிப்பாடாகவும் இந்தப் பரிசை அவருக்கு அளித்துள்ளார் தயாரிப்பாளர் சிவா.
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், பிரபு தேவா, மோகன் . மீனாட்சி சவுத்ரி, ஜெயராம், சினேகா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து சில நாட்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் ‘கோட்’.
இந்தத் திரைப்படம், விமர்சன ரீதியாகக் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், ஒரு முழு நேர பொழுதுபோக்கு கமர்சியல் திரைப்படமாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளைப் படைத்தது.
சுமார் 400 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ள இந்தப் படம் தற்போது நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. ‘கோட்’ படத்தில் நீக்கப்பட்ட காட்சிகளை சேர்த்து ஓடிடியில் வெளியிடுவதாக ஏற்கனவே இந்தப் படக்குழு திட்டமிட்டது.
ஆனால், அதற்கான சீ.ஜி பணிகள் பெருமளவில் இருந்ததால், அந்தக் காட்சிகளைத் தனியாக யூடியூபில் வெளியிடத் திட்டமிட்டு வருவதாக இயக்குநர் வெங்கட் பிரபு அறிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– ஷா
விருது வழங்கி பி.சுசீலாவுடன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய ஸ்டாலின்