கரூரில் நேற்று செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 40 பேர் இறந்துள்ளனர். இந்த துயர சம்பவம் தொடர்பாக, தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கரூரில் விஜய் பிரசார கூட்டத்துக்கு முறையான ஏற்பாடுகள் செய்யப்படாததால் 40 பேர் இறந்துள்ளனர். இதனையடுத்து நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வழக்கு விவரம்:
- குற்ற எண் 855/2025 பிரிவு 105,110,125 (b)r, 223 r/w 3 of,TNPPDL Act A1 குற்றவாளி மாவட்டச் செயலாளர் மதியழகன்
- A2 பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்
- A3 நிர்மல் குமார் மற்றும் பலர் என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
எந்த நேரத்திலும் கைது?
புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார், மதியழகன் ஆகிய 3 பேரும் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் எனவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
மேலும் தவெக தலைவர் விஜய்யையும் இந்த வழக்கில் விசாரணைக்கு பிறகு குற்றவாளியாக சேர்க்கவும் வாய்ப்பு உள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தலைமறைவா?
கரூர் போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் தற்போது தலைமறைவாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.