கரூர் சோகம் : குடும்பத்தினர் சிந்திய கண்ணீர் ஏற்படுத்திய வலி நெஞ்சத்தில் இருந்து அகலவில்லை – மு.க.ஸ்டாலின் உருக்கம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

MK Stalin who went to Karur returns to Chennai

தமிழக வெற்றிக் கழக பிரச்சாரக் கூட்டம் நேற்று மாலை கரூரில் நடைபெற்றது. விஜய் பேசிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 40 பேர் பலியாகி உள்ளனர். இந்த துயர சம்பவத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் முதல்வர் ஸ்டாலின் கரூர் புறப்பட்டு சென்றார். உயிரிழந்தவர்களின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும் அவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு முதல்வர் ஆறுதல் தெரிவித்தார். கரூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்டவர்களின் உடல் நலம் குறித்து நேரில் கேட்டறிந்தார்.
இந்நிலையில் இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புகிறார். கரூரில் இருந்து சாலை மார்க்கமாக திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து சென்னை புறப்பட்டார்.

ADVERTISEMENT

இதைத்தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், “உயிரிழந்தோரின் குடும்பத்தினர் சிந்திய கண்ணீர் ஏற்படுத்திய வலி நெஞ்சத்தில் இருந்து அகலவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share