நடிகர் விஜய் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் பலி.. உயிரிழந்தவர்களின் முழு விவரங்கள்

Published On:

| By Minnambalam Desk

கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது நேற்று (செப்டம்பர் 27) நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உறவினர் கதறும் காட்சிகள் காண்போதை பதற வைக்கும் நிலையில் உயிரிழந்தவர்களின் விபரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

உயிரிழந்வர்களில் 34 பேரின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 27 பேர் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். கரூர் விஸ்வநாத புரத்தை சேர்ந்து ஹேமலதா என்ற தாயும், கரூர் தனியார் பள்ளியில் பயிலும் அவரது குழந்தைகளான சாய் லக்ஷனா, சாய் ஜீவா ஆகியோரும் உயிரிழந்தனர். 

ADVERTISEMENT

உயிரிழந்தவர்களின் விபரங்கள்

கரூரைச் சேர்ந்த ஹேமலதா, சாய் லெட்சனா, சாய் ஜீவா, சுகன்யா, ஆகாஷ், வடிவழகன், தனவாய் குமார், சந்திரா ,குரு விஷ்ணு, ரமேஷ், சனோஜ், ரவி கிருஷ்ணன், பழனியம்மாள், கோகிலா, மகேஸ்வரி, அஜித்தா, மாலதி, பிரித்திக்யாதவ், விஜயராணி, திருப்பூரைச் சேர்ந்த கோகுலப்பிரியா, திண்டுக்கல் சேர்ந்த பாத்திமா பானு, கரூரை சேர்ந்த கிஷோர், ஜெயா, ஜெயக்குமார், தாமரைக்கண்ணன், பிரியதர்ஷினி, தரணியா, சுமதி, மணிகண்டன், சங்கர், கணேஷ், ஈரோடு சேர்ந்த ரேவதி,சதீஷ்குமார் சேலத்தைச் சேர்ந்த ஆனந்த் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share