தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வெளிச்சந்தை பகுதியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் இன்று (ஏப்ரல் 30) நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் புதிதாக தலைமை கழக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். Vijayaprabhakaran appointed as dmdk
அதன்படி, தேமுதிக பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் மீண்டும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அவைத்தலைவராக இளங்கோவன், பொருளாளர் எல்.கே.சுதீஷ், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி, இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன், கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ், துணை செயலாளர்கள் பன்னீர் செல்வம், சந்திரன், செந்தில் குமார், சுபா ரவி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். Vijayaprabhakaran appointed as dmdk