2026 சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி இப்போதே ஜோசியம் சொல்ல முடியாது என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பதில் அளித்தார். premalatha vijayakanth on 2026 alliance
வரும் ஜூலை மாதம் தமிழ்நாட்டில் 4 மாநிலங்களவை எம்.பி. பதவிகள் காலியாக உள்ளன. இதனையடுத்து 134 எம்.எல்.ஏக்களை கொண்ட திமுகவுக்கு 4 இடங்களும், 66 எம்.எல்.ஏக்களை கொண்டுள்ள அதிமுகவுக்கு 2 இடங்களும் கிடைக்கும்.
இந்த நிலையில் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் தர அதிமுக உறுதி அளித்ததாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். ஆனால் அப்படி எந்த ஒப்பந்தமும் மேற்கொள்ளவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தது சர்ச்சையானது. மேலும் அதிமுக – தேமுதிக கூட்டணி உறவு குறித்து இரு கட்சியினரிடையே குழப்பத்தை ஏறப்டுத்தியது.
இந்நநிலையில் மதுரை விமான நிலையத்தில் பிரேமலதா விஜயகாந்த் இன்று (மார்ச் 9) செய்தியாளர்களை சந்தித்தார்.
இன்னும் ஒரு வருடம் இருக்கிறது!premalatha vijayakanth on 2026 alliance
அப்போது அவரிடம் இந்த விவாகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பிரேமலதா, “அதிமுகவுக்கும் எங்களுக்கும் இடையே எந்த மனவருத்தமும் இல்லை.. தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. அப்போது கூட்டணி குறித்து உங்களுக்கு அறிவிப்போம்.
தேர்தல் ஆலோசகரை நியமிப்பது ஒவ்வொரு கட்சியின் நிலைப்பாடு. தேர்தல் ஆலோசகர் வைத்திருப்பதால் மட்டுமே நூறு சதவீதம் வெற்றி பெற முடியாது. அது குறிப்பிட்ட கட்சியின் வியூகம். ஆனால் விஜயகாந்த் என்றைக்குமே மக்களை மட்டுமே நம்பினார்.
அதிமுக – பாஜக – தேமுதிக கூட்டணி குறித்து இப்போதே ஜோசியம் சொல்ல முடியாது. அந்த காலம் வரும்போது அதுகுறித்து உங்களுக்கு தெரிவிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
தமிழக அரசுடன் இணைந்து தேமுதிக போராடும்!premalatha vijayakanth on 2026 alliance
மேலும் அவர், ”தமிழ்நாட்டை பொறுத்தவரை தமிழ் மொழிதான், நமது தாய் மொழி, உயிர் மொழி. எல்லோரும் தமிழ் படிப்பதை கட்டாயமாக்கப்பட வேண்டும். கேப்டன் சொன்னது போல் அன்னை மொழி காப்போம், அனைத்து மொழியும் கற்போம் என்பதுதான்.
எம்பி தொகுதிகளை குறைக்க உள்ளதாக கருத்து உள்ளது. ஆனால் அது குறித்து மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு தராததால், அது பற்றி பேச ஏதுமில்லை. ஒரு வேளை 40 எம்பிக்கள் எண்ணிக்கை குறைத்தால், தமிழக அரசுடன் இணைந்து மக்களுக்காக தேமுதிக போராடும்.
மீனவர்கள் வாழ்வாதாரம் கடலை நம்பி இருக்கும் போது இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதும், கைது செய்வதையும் மத்திய அரசு தடுக்க வேண்டும். பிரதமர் மோடி, இலங்கை பயணம் மேற்கொள்ளும் போது நமது தமிழக மீனவர்களுக்கு அச்சுறுத்தல் இல்லாதபடி ஒப்பந்தத்தை போட வேண்டும். கச்சத்தீவை மீட்கும் நடவடிக்கையை எடுக்க வேண்டும்” என பிரேமலதா தெரிவித்தார்.