பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் போட்டி

Published On:

| By Mathi

Vijay TVK

பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய சட்டசபை தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் போட்டியிடுகிறார்

பெரம்பூர் தொகுதியின் பின்னணி

ADVERTISEMENT

பெரம்பூர் தொகுதியில் 9 முறை திமுக வெற்றி பெற்றுள்ளது; 3 முறை சிபிஎம் கட்சி வென்றுள்ளது. அதிமுக 2 முறையும் காங்கிரஸ் 1 முறையும் வென்றுள்ளன.

திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சத்தியவாணி முத்து அம்மையார் 1957-ல் சுயேட்சையாக இத்தொகுதியில் போட்டியிட்டார். 1962-ல் திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். ஆனால் 1967, 1971-ல் சத்தியவாணி முத்து அம்மையார் வென்றார். அதிமுகவுக்கு சென்ற பின்னர் 1984-ம் ஆண்டு இதே தொகுதியில் சத்தியவாணி முத்து போட்டியிட்டார். அப்போது திமுகவின் இளைஞராக இருந்த பரிதி இளம்வழுதி 7,204 வாக்குகள் வித்தியாசத்தில் சத்தியவாணி முத்து அம்மையாரை தோற்கடித்து சரித்திரம் படைத்தார்.

ADVERTISEMENT

அதன் பின்னர் திமுகவின் செங்கை சிவம் 1989, 1996-ல் இத்தொகுதியில் வென்றார்

2001, 2006-ல் சிபிஎம் மகேந்திரன் வென்றனர். 2011-ல் சிபிஎம்-ன் சவுந்தரராஜன் எம்.எல்.ஏ.வானார். 2016 தேர்தலில் அதிமுகவின் வெற்றிவேல், திமுக சார்பாக போட்டியிட்ட என்.ஆர். தனபாலனை விட 519 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றார்.

ADVERTISEMENT

2019 இடைத் தேர்தலில் திமுகவின் ஆர்டி சேகர், அதிமுகவின் ஆர்.எஸ். ராஜேஷை 68,023 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

கடந்த 2021 தேர்தலில் திமுகவின் ஆர்டி சேகர், 54,976 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட என்.ஆர். தனபாலனை தோற்கடித்தார்.

திருச்சி கிழக்கு தொகுதி

2011-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட திருச்சி கிழக்கு தொகுதியில் 2011, 2016-ல் அதிமுகவும் 2021-ல் திமுகவும் வெற்றி பெற்றுள்ளன.

2021-ம் ஆண்டு தேர்தலில் திமுக வேட்பாளராக இனிகோ இருதயராஜ், அதிமுகவின் வெல்லமண்டி நடராஜனை 53,797 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

2016-ல் வெல்லமண்டி நடராஜனும் 2011-ல் அதிமுகவின் மனோகரனுன் வென்று எம்.எல்.ஏ.வாகினர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share