தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத்தின் 234 வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று மார்ச் 29-ந் தேதி அறிவிக்கிறார்.
சென்னை தாஜ் ஹோரமண்டல் நட்சத்திர விடுதியில் 234 வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டத்தை நடத்துகிறார் தவெக தலைவர் விஜய். இந்தக் கூட்டத்தில் புதுச்சேரியில் தவெக போட்டியிடும் 30 தொகுதிகளின் வேட்பாளர்களும் அறிமுகப்படுத்த உள்ளனர்.
சட்டசபை தேர்தலில் தவெக வேட்பாளர்களுக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் எந்த ஒரு கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தனித்தே போட்டியிடுகிறது.
