தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது இரண்டாவது பிரச்சாரத்தை இன்று (செப்டம்பர் 20) நாகையில் தொடங்கியுள்ளார்.
இதையொட்டி சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த விஜய், அங்கிருந்து தனது கார் மூலம் நாகை வந்து அங்கிருந்து பிரச்சார பேருந்து மூலம், உரையாற்றும் இடமான அண்ணா சிலை பகுதிக்கு மக்கள் வெள்ளத்துக்கு நடுவே வந்தார்.
அப்போது, ‘எல்லோரும் எப்படி இருக்கீங்க… சாப்டீங்களா என கேட்ட விஜய், அண்ணாவுக்கும் பெரியாவுக்கும் வணக்கத்தை தெரிவித்து பேச்சை தொடங்கினார்.
“நான் எந்த மண்ணில் நின்றுக்கொண்டிருக்கிறேன் தெரியுமா… நாகூர் ஆண்டவர் அன்போடு… நெல்லுக்கடை மாரியம்மன், அன்னை வேளாங்கண்ணி ஆசியோடு… கடல் தாய் மடியில் இருக்கும் என் மனசுக்கு நெருக்கமான நாகை மண்ணில் இருந்து பேசிக்கொண்டிருக்கிறேன்…
இந்த மீனவர்களுக்கு நண்பனாக எப்போதும் நான் இருப்பேன்’ என தொடர்ந்து பேசி வருகிறார்.