“தேர்தல் ஆணையத்தின் மதிப்பு குறைந்துவிட்டது” : முதல்வர் ஸ்டாலின்

Published On:

| By Kavi

பீகார் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிதிஷ் குமாருக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.

நடந்து முடிந்த பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 89 தொகுதிகளிலும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 85 இடங்களிலும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவுள்ளது. மீண்டும் நிதிஷ் குமார் முதல்வராகவுள்ளார்.

ADVERTISEMENT

இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆர்ஜேடி 25 இடங்களிலும், காங்கிரஸ் 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன.

பீகார் தேர்தல் முடிவைத் தொடர்ந்து அம்மாநில முதல்வர் நிதிஷ் குமாருக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.

ADVERTISEMENT

இதுகுறித்து இன்று (நவம்பர் 15) வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், “மூத்த தலைவர் நிதிஷ் குமாரின் தீர்க்கமான வெற்றிக்கு வாழ்த்துக்கள். அத்துடன் பீகார் மக்களின் எதிர்பார்ப்புகளை அவர் பூர்த்தி செய்யவும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இளைஞர் தலைவர் தேஜஸ்வி யாதவின் சோர்வில்லாத தேர்தல் பிரசாரத்திற்கும் நான் பாராட்டுகளைத் தெரிவிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

மேலும் அதில், “இந்தியா கூட்டணியின் தலைவர்கள் செய்தியைப் படித்து, வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்ள மூலோபாய ரீதியாக திட்டமிடும் திறன் கொண்ட அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகள்.

தேர்தல் ஆணையத்தின் மதிப்பு எவ்வளவு குறைந்துள்ளது என்பதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. தேர்தல் ஆணையத்தின் நற்பெயர் மிகவும் தாழ்ந்த கட்டத்தில் உள்ளது. வெற்றி பெறாதவர்களுக்கு கூட நம்பிக்கை அளிக்கும் வகையில் தேர்தல் ஆணைய செயல்பாடு இருக்க வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share